சில கணனி, அலைபேசி விளையாட்டுக்களுக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை.

சில வகை கணனி மற்றும் அலைபேசி ஒளித்தோற்ற விளையாட்டுகளுக்கு (Video Games) தடை விதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

சில வகை ஒளித்தோற்ற விளையாட்டுக்களை கணனி அல்லது அலைபேசி வழியாக விளையாடுவதனால் சிறுவர்களின் உளநிலை பாதிக்கப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அநேகமான சிறுவர் சிறுமியர் கணனி விளையாட்டுக்களுக்கு அடிமையாகியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில வகையான கணனி விளையாட்டுக்களை விளையாடும் சிறார்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு உளநிலை பாதிக்கப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இவ்வாறான ஆபத்தான விளையாட்டுக்களை தடை செய்ய அரசாங்கம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews