லிட்ரோ கேஸ் நிறுவனம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

சவர்க்கார நீர் போன்ற முறைகளைப் பயன்படுத்தி வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டர்களை சோதனை செய்ய வேண்டாம் என லிட்ரோ கேஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனம் நுகர்வோரை எச்சரித்துள்ளது.

அண்மை காலமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தினமும் வெடிப்பு சம்பவங்கள பதிவாகியிருந்தன. இது குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதியால் சிறப்பு குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, சவர்க்கார நீர் போன்ற முறைகளைப் பயன்படுத்தி வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டர்களை சோதனை செய்ய வேண்டாம் என லிட்ரோ கேஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனம் நுகர்வோரை எச்சரித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews