வடக்கில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா..!  49 மரணங்கள் பதிவு.. | 

வடக்கில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா..! நவம்பர் மாதத்தில் உச்சம் தொட்டது, 49 மரணங்கள் பதிவு..
வடமாகாணத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 3049 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 49 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார திணைக்கள புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதன்படி வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2 ஆயிரத்து 661 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். எனினும் நவம்பர் மாதத்தில் 3 ஆயிரத்து 49 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் மாத்தில் கொவிட்-19 நோயினால் 71 பேர் உயிரிழந்தனர். எனினும் நவம்பர் மாதத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 பேராகக் குறைவடைந்துள்ளது.நவம்பர் மாதத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகப்படியாக 842 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடுத்தபடியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 825 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் முறையே 713, 540, 129 பேர் நவம்பர் மாதத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் கடந்த 30ம் திகதி 75 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், யாழ்ப்பபாணம் மாவட்டத்தில் 30 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தலா 5 பேரும்

முல்லைத்தீவில் ஒருவரும் என 49 பேர் கொவிட்-19 நோயினால் நவம்பர் மாதத்தில் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் 2020 மார்ச் தொடக்கம் நேற்று வரை வடக்கு மாகாணத்தில் 41 ஆயிரத்து 952 பேர் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 890 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews