சிறுவர் பாதுகாப்பு குழுவுக்கான  விசேட பயிற்சிப்பட்டறை….!

(மாந்தை நிருபர்)
றகமா நிறுவனத்தினரால்
சிறுவர் சமூகத்தினை நிலைத்த மனித வளம் மிக்க சமூதாயமாக உருவாக்கும் நோக்குடன் சிறுவர் வளம், சமூதாயத்தின் பண்புகளை சிறந்த முறையில் மாற்றி அமைப்பது,  அவர்களின் ஆற்றல்கள், விசேட திறமைகளை இனங்கண்டு அதற்கு பொருத்தமான களங்களை ஏற்படுத்தி கொடுத்தல்,  கிடைக்கப்பெற்ற வளங்களைக் கொண்டு பூரண அடைவுகளை பெற பின்னூட்டல்களை மேற்கொள்ளல்,  போன்ற விடயங்களை உள்ளடக்கிய பயிற்சி பட்டறை  நேற்று 1/12/2021
மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.
முல்லைமாவட்டம் மாந்தை கிழக்கு  பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இச் செயற்திட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதெரச சிறுவர்கழக உறுப்பினர்கள்,  பெற்றோர், பாடசாலை சமூகம் , சமூக மட்ட அமைப்புக்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் உதவிக்கல்விப்பணிப்பாளர் , அதிபர்கள், ஆசிரியர்கள், கிரம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம அலுவர்கள், சமூர்த்தி  உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசியர்கள் என 65 பேர்வரை கலந்து கொண்டனர்.
இதில் மாந்தைக்கிழக்கு பிரதேசத்தில் உள்ள சிறுவர்கள் தற்போது எதிர் நோக்கும் சவால்களை தீர்ப்பது தொடர்பான தயாரிக்கப்பட்டு கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
றகமா நிறுவனம் செயற்பாட்டாளர் விமலன் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாந்தைக்கிழக்கு உதவி  பிரதேச செயலாளர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், சுயுர்சார்பு திட்ட இணைப்பாளர்கள் இப்பயிற்சிக்கான வசதிப்படுத்துனராக செயற்பட்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews