நாளைய ராசி பலன், விசுவாவசு வருடம் வைகாசி 13, செவ்வாய்கிழமை, மெ 27/2025.

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟭𝟯 🇮🇳꧂_*

*_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜*

*_📆  𝟮𝟳•𝟬𝟱•𝟮𝟬𝟮𝟱 🦚_*

*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

 

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

 

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*

மனதளவில் தெளிவு பிறக்கும். உடலில் இருந்துவந்த அசதிகள் குறையும். சுரங்கப் பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். நண்பர்களுடைய சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெற்றி நிறைந்த நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

 

⭐️அஸ்வினி : தெளிவு பிறக்கும்.

⭐️பரணி : நெருக்கம் அதிகரிக்கும்.

⭐️கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

 

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*

எதிலும் தனித்துவமாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் கைகூடும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்பரிந்து நடப்பது நல்லது. எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் கருணையுடன் செயல்படவும். முயற்சிக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். சலனம் நிறைந்த நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

 

⭐️கிருத்திகை : பயணங்கள் கைகூடும்.

⭐️ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.

⭐️மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

 

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*

மனதில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். துணைவருடன் சிறுதூரப் பயணம் சென்று வருவீர்கள். எந்தவொரு செயலிலும் முன்கோபமின்றி விவேகத்துடன் செயல்படவும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடல்நிலையில் சோர்வும் ஒருவிதமான மந்த நிலையும் ஏற்படும். பயம் மறையும் நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

 

⭐️மிருகசீரிஷம் : கண்ணோட்டம் பிறக்கும்.

⭐️திருவாதிரை : விவேகத்துடன் செயல்படவும்.

⭐️புனர்பூசம் : மந்தமான நாள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

 

*_♋ கடகம் – ராசி: 🦀_*

நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணம் சார்ந்த வாய்ப்புகள் சாதகமாக அமையும். பயணங்களின் மூலம் ஆதாயமடைவீர்கள். திடீர் வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். கோபம் விலகும் நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

 

⭐️புனர்பூசம் : கவலைகள் விலகும்.

⭐️பூசம் : சாதகமான நாள்.

⭐️ஆயில்யம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

 

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*

அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் விவாதங்களை குறைத்துக்கொள்ளவும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். கல்வி பணிகளில் ஆர்வம் ஏற்படும். வரவுகள் சாதகமாக இருக்கும். வாழ்க்கை துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

 

⭐️மகம் : வாதங்களை குறைக்கவும்.

⭐️பூரம் : ஆர்வம் ஏற்படும்.

⭐️உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

 

*_♍ கன்னி – ராசி: 👩_*

தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனைகள் கூறுவதில் கவனம் வேண்டும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளால் மாற்றங்கள் ஏற்படும். வெளிநாடு தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். புதிய ஆராய்ச்சி சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

 

⭐️உத்திரம் : ஈடுபாடு ஏற்படும்.

⭐️அஸ்தம் : கவனம் வேண்டும்.

⭐️சித்திரை : தேடல்கள் அதிகரிக்கும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

 

*_♎ துலாம் – ராசி: ⚖_*

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் தன்மையறிந்து பழகவும். வாக்குறுதிகள் கொடுப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானம் வேண்டும். சக ஊழியர்கள் இடத்தில் அமைதியுடன் செயல்படவும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. அமைதி வேண்டிய நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

 

⭐️சித்திரை : கவனம் வேண்டும்.

⭐️சுவாதி : நிதானம் வேண்டும்.

⭐️விசாகம் : வாதங்களை தவிர்க்கவும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

 

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*

துணைவர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் ஆதரவு ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். துணிவு நிறைந்த நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

 

⭐️விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.

⭐️அனுஷம் : ஆதரவு ஏற்படும்.

⭐️கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

 

*_♐ தனுசு – ராசி:  🏹_*

குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். உங்களின் மீது நம்பிக்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீர் பெறும். எண்ணிய காரியங்கள் அனுகூலமாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சகோதரர்கள் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். நலம் நிறைந்த நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

 

⭐️மூலம் : நம்பிக்கை உண்டாகும்.

⭐️பூராடம் : அனுகூலமான நாள்.

⭐️உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

 

*_♑ மகரம் – ராசி: 🦌_*

வர்த்தகம் தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிவீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டார நட்புகள் மேம்படும். மனதில் புதுவிதமான கனவுகள் உண்டாகும். இறைவழிபாடு மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அடமான பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். கடன் பத்திர விஷயங்களில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

 

⭐️உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

⭐️திருவோணம் :  நம்பிக்கை மேம்படும்.

⭐️அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

 

*_♒  கும்பம் – ராசி: 🍯_*

கல்வி தொடர்பான ஆலோசனைகள் மூலம் தெளிவு பிறக்கும். உறவினர்களின் வகையில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். இரக்கம் வேண்டிய நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

 

⭐️அவிட்டம் : தெளிவு பிறக்கும்.

⭐️சதயம் : பிரச்சனைகள் குறையும்.

⭐️பூரட்டாதி : ஆதாயம் மேம்படும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

 

*_♓ மீனம் – ராசி:  🐟_*

நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பாகப்பிரிவினை முயற்சிகள் கைகூடும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் உண்டாகும். வாகனம் தொடர்பான பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். பாசம் நிறைந்த நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

 

⭐️பூரட்டாதி : சந்திப்பு ஏற்படும்.

⭐️உத்திரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.

⭐️ரேவதி : அனுகூலமான நாள்.

*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews