நாளைய ராசி பலன், விசுவாவசு வருடம் வைகாசி 12, திங்கட்கிழமை, மே 26/2025.

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟭𝟮 🇮🇳꧂_*
*_🌼 திங்கள் -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟲•𝟬𝟱•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
கால்நடை வளர்ப்பு பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். எந்தவொரு காரியத்திலும் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். புதிய மக்களின் தொடர்புகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️அஸ்வினி : ஆதாயகரமான நாள்.
⭐️பரணி : பிரச்சனைகள் குறையும்.
⭐️கிருத்திகை : அறிமுகம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தோற்றப் பொலிவில் மாற்றம் உண்டாகும். சூழ்நிலை அறிந்து முடிவுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்களிடமிருந்து விலகி செயலாற்றுவதில் ஈடுபாடு ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். கனிவு வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
⭐ரோகிணி : புரிதல் ஏற்படும்.
⭐மிருகசீரிஷம் : பேச்சுகளில் கவனம்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼♀‍_*
உத்தியோகம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொழில் வாய்ப்புகள் அமையும். புதிய நபர்களால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். இரவு நேர பயணங்களை குறைத்துக் கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐மிருகசீரிஷம் : பணிகளில் கவனம் வேண்டும்.
⭐திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐புனர்பூசம் : புரிதல்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
கலைத்துறையினருக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். காப்பகம் சார்ந்த பணிகளில் ஆதாயம் மேம்படும். உயரதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் நட்பு வட்டம் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐புனர்பூசம் : பொறுப்புகள் கிடைக்கும்.
⭐பூசம் : ஆதாயம் மேம்படும்.
⭐ஆயில்யம் : லாபம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். செய்தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும். ரவீடு வாகனத்தை சரி செய்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் அமையும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். துணிவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐மகம் : மேன்மை உண்டாகும்.
⭐பூரம் : அறிமுகம் ஏற்படும்.
⭐உத்திரம் : எண்ணங்கள் கைகூடும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
எதிர்கால தொடர்பான முதலீடுகள் மேம்படும். சிறு மற்றும் குறு தொழில் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். விவேகமான செயல்பாடுகள் முன்னேற்றத்தை உண்டாக்கும். சோதனை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐உத்திரம் : முதலீடுகள் மேம்படும்.
⭐அஸ்தம் : தேடல்கள் அதிகரிக்கும்.
⭐சித்திரை : முன்னேற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். திட்டமிட்ட சில பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமைக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐சித்திரை : அனுசரித்து செல்லவும்.
⭐சுவாதி : வாதங்களை தவிர்க்கவும்.
⭐விசாகம் : மதிப்பு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பழக்க வழக்கங்களில் சில மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் உயர்வான சூழல் அமையும். பணிபுரியும் இடத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கவலை விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐விசாகம் : மாற்றம் பிறக்கும்.
⭐அனுஷம் : ஆர்வம் ஏற்படும்.
⭐கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தோற்றப் பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் இடத்தில் பொறுமை வேண்டும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். பாராட்டு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்.

⭐மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.
⭐பூராடம் : பொறுமை வேண்டும்.
⭐உத்திராடம் : ஆதாயகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
பிள்ளைகளின் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐உத்திராடம் : சிந்தனை அதிகரிக்கும்.
⭐திருவோணம் : மாற்றங்கள் பிறக்கும்.
⭐அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். உறவினர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் மற்றும் விருப்பங்கள் உண்டாகும். மனை சார்ந்த இழுபறிகள் விலகும். எந்தவொரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். மறதி குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐அவிட்டம் : நெருக்கடிகள் உண்டாகும்.
⭐சதயம் : புரிதல் அதிகரிக்கும்.
⭐பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். சாந்தம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐பூரட்டாதி : துரிதம் அதிகரிக்கும்.
⭐உத்திரட்டாதி : அறிமுகம் ஏற்படும்.
⭐ரேவதி : விழிப்புணர்வு வேண்டும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews