
*_꧁. வைகாசி: 𝟭𝟰
꧂_*
*_ புதன் -கிழமை_
*
*_ 𝟮𝟴•𝟬𝟱•𝟮𝟬𝟮𝟱
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த முயற்சிகள் கைகூடும். ஒப்பந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சமையல் துறையில் திறமைகள் வெளிப்படும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
அஸ்வினி : அனுபவம் கிடைக்கும்.
பரணி : முயற்சிகள் கைகூடும்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். கல்வியில் ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : நெருக்கடிகள் குறையும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
உயர்கல்வியில் கவனம் வேண்டும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். வெளியூர் பயணம் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்தவந்த மறைமுகமான எதிர்ப்புகள் குறைவதில் தாமதம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : தாமதம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். தந்தைவழி உறவுகளிடம் பொறுமை வேண்டும். மருத்துவப் பொருட்கள் சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் அனுசரித்து செல்லவும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம்.
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோகம் மாற்றம் தொடர்பான விஷயங்களில் தெளிவு பிறக்கும். தொல்லை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
மகம் : மாற்றம் உண்டாகும்.
பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரம் : தெளிவு பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
அரசு சார்ந்த பணிகள் நிறைவு பெறும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தாயாரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். வியாபாரம் குறித்த தெளிவு பிறக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பங்கள் தோன்றி மறையும். சாதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
உத்திரம் : சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
அஸ்தம் : தெளிவு பிறக்கும்.
சித்திரை : குழப்பங்கள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தர்ம செயல்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப மாற்றம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் முன் யோசனையோடு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : மாற்றம் உண்டாகும்.
விசாகம் : அலைச்சல்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான பயங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். குழப்பமான சிந்தனைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். திறமைக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
விசாகம் : நிதானத்துடன் செயல்படவும்.
அனுஷம் : தாமதம் ஏற்படும்.
கேட்டை : சிந்தித்து செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை ஏற்படும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வருவார்கள். இலக்கிய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான உதவிகள் அமையும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
மூலம் : திருப்தியான நாள்.
பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திராடம் : ஆசைகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். போட்டி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். எதிர்பாலின மக்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் இடத்தில் அனுசரித்து செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.
திருவோணம் : ஆர்வம் ஏற்படும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
அரசு பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்களில் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துகள் வழியில் மாற்றங்கள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.
சதயம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். போட்டிகளில் இருந்துவந்த தயக்கங்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பணிகளில் அனுகூலம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
பூரட்டாதி : தயக்கங்கள் குறையும்.
உத்திரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
ரேவதி : சோர்வு ஏற்படும்.
*┈┉┅━•• ••━┅┉┈*