எரிபொருள் விலை அதிரடியாக அதிகரிப்பு!

இலங்கையில் நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கப்படுகின்றது எனப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு லீற்றர் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக (20 ரூபாவால்) அதிகரிக்கின்றது.

ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாவிலிருந்து 207 ரூபாவாக (23 ரூபாவால்) அதிகரிக்கின்றது.

ஒடோ டீசல் ஒரு லீற்றரின் விலை 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக (10 ரூபாவால்) அதிகரிப்பதுடன், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 144 ரூபாவிலிருந்து 159 ரூபாவாக (15 ரூபாவால்) உயர்வடைகின்றது.

இதேவேளை, மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 77 ரூபாவிலிருந்து 87 ரூபாவாக (10 ரூபாவால்) அதிகரிக்கின்றது.

Recommended For You

About the Author: kathiresu bavananthy