புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று (6) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை வசமுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மூலங்களைப் பயன்படுத்தி, கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை நாட்டில் ஆரம்பிப்பதற்கு அவசியமான சட்ட பின்னணி மற்றும் கட்டுப்பாட்டு பொறிமுறையை தயாரிப்பதற்கும் இதனூடாகக் கனிய எண்ணெய் துறையில் பாரிய முதலீட்டை இலங்கையின் கனிய எண்ணெய் வள ஆய்வுக்காக ஈர்ப்பதற்கும் புதிய சட்டமூலத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சின் காரியாலயம் தெரிவித்துள்ளது.உரிய மற்றும் சுயாதீன கட்டுப்பாட்டு அதிகாரிகங்களுடன் இலங்கை கனியவள அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிப்பதே இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews