வெள்ளைப்பூண்டு மோசடி; வர்த்தகர் கைது October 6, 2021

லங்கா சத்தொசவில் இடம் பெற்ற  வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பாக, பூண்டு தொகையை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டியைச் சேர்ந்த 55 வயதான வர்த்தகர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர், வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் நாளை (07) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பேலியகொட சிறப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆரம்பத்தில் பூண்டு மோசடி வழக்கு விசாரணைகளை ஆரம்பித்து, பின்னர் சிஐடியிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews