ஊழல்வாதிகளின் பெயரே முதலிடத்தில் உள்ளது – அக்மீமன தயாரத்ன தேரர்

உலகில் யாருக்கும் செய்ய முடியாத விடயங்களை செய்து முதலிடத்துக்குச் சென்றவர்களின் வீர செயல்கள் தொடர்பிலான விவரங்களே ஆரம்ப காலங்களில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. தற்போதைய நிலையில் வீர சரித்திரங்களுக்குப் பதிலாக உலகில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என்று, சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நிருபாமா ராஜபக்ஸ மற்றும் அவரது கணவரின் பெயர், அந்த பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இன்னும் சிறிது காலத்தில் மேலும் பலரது பெயர்கள் வெளியாகும்.

நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர் ஒருவர் தெரிவானதன் பின்னர் அந்த உறுப்பினர் தொடர்பிலான சொத்து பொறுப்புகள் தொடர்பிலான விடயங்களை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் போது எத்தகைய சொத்துக்கள் இருந்தன. வருமான மார்க்கங்கள் எவை, வைப்பிலிடப்பட்டிருக்கும் பணம் போன்ற விவரங்களை நாடாளுமன்றத்துக்கு வழங்க வேண்டும்.

அரசாங்க சேவையாளர் என்ற முறையில் அதனை அவர் செய்ய வேண்டும். ஐந்து வருடங்கள் நாடாளுமன்றத்தில் பதவி வகிக்கும் உறுப்பினர் ஒருவர் தனது சொத்துப் பொறுப்புகள் தொடர்பிலான தகவல்களை நாடாளுமன்றத்துக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.

நிருபாமா ராஜபக்ஸவின் சொத்து பொறுப்புகள் தொடர்பிலான விடயங்கள் வழங்கப்பட்டுள்ளதா என நாடாளுமன்ற செயலாளரிடம் நாம் கேட்கவிளைகின்றோம். அவர் எவ்வாறான வழிமுறைகளில் பணத்தை பெற்றுகொண்டார், அது தொடர்பிலான தரவுகளை நாடாளுமன்றத்துக்கு அவர் வழங்கியுள்ளாரா?, அவ்வாறான தகவல்களை அவர் வழங்கியிருந்தால் இந்த விடயம் ஏன் வெளியாகவில்லை. எனவே ஊழல் ஒன்று இடம்பெற்றுள்ளது புலனாகிறது. நாட்டிலுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் இவ்விடயத்துக்குப் பதலளிக்கப்போவதில்லை. இவ்விடயம் தொடர்பில் மக்கள் எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews