மக்கள் சேவகன், மக்களுக்காக வாழ்ந்தவன் கந்தையா ஜெயசீலன்.அவர்களது இழப்பு பேரிழப்பாகும்.

ஒரு மக்கள் சேவகன், மக்களுக்காக வாழ்ந்தவன் கந்தையா ஜெயசீலன்.அவர்களது இழப்பு பேரிழப்பாகும்

மக்களுக்காக இரவு பகல் பாராது யுத்த காலத்திலும் அதற்கு பின்னரான காலத்திலும் தன்னை  அர்ப்பணித்து பணியாற்றியவர்தான் கந்தையா ஜெயசீலன்/சீலன் அவர்கள், reerdo என்று சொல்லப்படுகின்ற புனர்வாழ்வு கல்வி பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக வன்னியில் யுத்தம் இடம் பெற்ற காலங்களில் அதன் இயக்குநர்களில் ஒருவராகவும், நிகழ்சி திட்டத்திற்க்கு பொறுப்பாகவும் இருந்து இரவு பகல் பாராது, ஓய்வின்றி அர்ப்பணிப்போடு தனது மக்களுக்காக உழைத்தவன் தான் கந்தையா ஜெயசீலன்.இறுதி யுத்த காலத்தில் மனித குலமே எதிர்கொண்டிருக்க முடியாத மிக மோசமான  அந்த அந்த நாட்களில் அந்த மக்களின் உணவுக்காக, அவர்களுக்கான தற்காலிக உறைவிடத்திற்க்காக கொத்துக் கொத்தாக காயமடைந்த மக்களை காப்பாற்றுவதிலும், வகை தொகை இன்றி கொல்லப்பட்ட மக்களை அடக்கம் செய்வதிலும் இறுதிவரை உழைத்தவன் தான் இந்த கந்தையா ஜெயசீலன். வார்த்தைகளால் வர்ணிகக முடியாத, சொல்ல முடியாத மக்கள் சேவை ஆற்றியவன்,

சிறந்த கல்வி அபிவிருத்தி பொருளாதார திட்டங்களை தீட்டுவதிலும் வல்லவன். சிறந்த பல்துறை ஆளுமை கொண்டவன், தனக்காக இன்றி துன்பப்படும், துன்பப்பட மக்களுக்காக உழைத்த அந்த சமூகப் போராளி நேற்று சிறுநீரக செயலிழப்பால் மரணமடைந்ததுள்ளான்  அவரது இழப்பு குடும்பத்திற்கு மட்டுமல்ல அவனால் பயனுற்ற அனைவருக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews