
*_꧁. 🌈 வைகாசி: 𝟯𝟭 ꧂_*
*_🌼 சனிக்கிழமை_ 🦜*
*_📆 𝟭𝟰•𝟬𝟲•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
செய்யும் செயல்களில் புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதிகளுக்குள் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். பழைய கடன் பிரச்சினைகள் குறையும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
⭐️அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️பரணி : வாய்ப்புகள் மேம்படும்.
⭐️கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
பிடிவாதப் போக்கினைக் குறைத்துக்கொள்ளவும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயனற்ற செலவுகளைக் குறைப்பீர்கள். மருத்துவத் துறையில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.
⭐️கிருத்திகை : மதிப்பு உயரும்.
⭐️ரோகிணி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
⭐️மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். மறைமுகமான சில விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உயர் அதிகாரிகளின் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தேவையற்ற அலைச்சலால் உடலில் சோர்வுகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
⭐️திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.
⭐️புனர்பூசம் : சோர்வுகள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் – ராசி: 🦀_*
பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபார வியூகங்களைப் புரிந்துகொள்வீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தோற்றப்பொலிவு அதிகரிக்கும். உழைப்பிற்கான மதிப்பு கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️புனர்பூசம் : சோர்வுகள் நீங்கும்.
⭐️பூசம் : நம்பிக்கை பிறக்கும்.
⭐️ஆயில்யம் : மதிப்பு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கு சார்ந்த செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் பயணம் மூலம் மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புகழ் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐️பூரம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
⭐️உத்திரம் : முன்னேற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி – ராசி: 👩_*
குடும்பத்தில் ஆதரவு மேம்படும். பூர்வீகப் பிரச்சினைகள் குறையும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். அரசுப் பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படும். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️உத்திரம் : ஆதரவு மேம்படும்.
⭐️அஸ்தம் : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐️சித்திரை : ஈடுபாடு உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் – ராசி: ⚖_*
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பார்வை தொடர்பான பிரச்சினைகள் குறையும். முதலீடு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பெருந்தன்மையான செயல்களால் மதிப்பு உயரும். கால்நடை வழியில் ஆதாயம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். செல்வாக்கு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️சித்திரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.
⭐️சுவாதி : மதிப்பு உயரும்.
⭐️விசாகம் : போட்டிகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் பொறுமையைக் கையாளவும். உத்தியோகத்தில் மறைமுக வாய்ப்புகளை அறிவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குழப்பம் விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️விசாகம் : அறிவு வெளிப்படும்.
⭐️அனுஷம் : பிரச்சனைகள் தீரும்.
⭐️கேட்டை : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு – ராசி: 🏹_*
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.
⭐️மூலம் : தீர்வு ஏற்படும்.
⭐️பூராடம் : மதிப்பு உயரும்.
⭐️உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் – ராசி: 🦌_*
பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் கிடைக்கும். சமூகப் பணிகளில் சில மாற்றம் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் திருப்தியற்ற மனநிலை ஏற்படும். புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். இன்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
⭐️திருவோணம் : முன்னேற்றம் கிடைக்கும்.
⭐️அவிட்டம் : சிந்தனைகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் – ராசி: 🍯_*
தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். நண்பர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்கு விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். நேரம் தவறி உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். மற்றவர்கள் இடத்தில் சுமுகமாகப் பழகவும். சோர்வுகள் மறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்.
⭐️அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️சதயம் : திருப்பங்கள் உண்டாகும்.
⭐️பூரட்டாதி : சுமுகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் – ராசி: 🐟_*
பொதுக் காரியங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்து சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அணுகுமுறையில் சில மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியப் பிரச்சினைகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். தாமதம் விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.
⭐️பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️உத்திரட்டாதி : மாற்றம் ஏற்படும்.
⭐️ரேவதி : நம்பிக்கை பிறக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*