மனித நுகர்வுக்குப் பொறுத்தமற்ற 40,000 கிலோகிராம் கிழங்குகள் கைப்பற்றல்.

மனித நுகர்வுக்குப் பொறுத்தமற்ற சுமார் 40,000 கிலோகிராம் கிழங்குகள் உள்ளடங்கிய கொள்கலன் ஒன்று தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தைக்கு அருகிலுள்ள தனியார் களஞ்சியசாலையிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக, தம்புள்ளை மாநகர சபைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த கிழங்குகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றைப்... Read more »

மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய சந்நிதியான் ஆச்சிரமம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசங்களில் பின்தங்கிய நிலையில் உள்ள 14 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக சந்நிதியான் ஆச்சிரமத்தினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. மாந்தை கிழக்கு மு/விநாயகபுரம் அ.த.க பாடசாலையில் கல்விகற்கும் 5 மாணவர்களுக்கும் துணுக்காய்... Read more »

வெளிநாட்டிலிருந்து வழங்கிய பணத்திற்காக அரியாலையில் பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்ட இருவர் கைது!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தம்மிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில்... Read more »

மொத்த சனத் தொகையில் 15 வீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிப்பு.ஆ.பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன்.

மொத்த சனத் தொகையில் 15 வீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப் படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.   இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சமூகத்தால்  ஏற்பாடு செய்யப்பட்ட நீரிழிவு நோய் விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட... Read more »

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம்.

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம். (17-11-2021) காலை வெட்டுக் காயங்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகைக்குள்  வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று17-11-2021)அயலவர்களால்   அவதானிக்கப்பட்டுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய... Read more »

சஜித் கொத்தணி உருவாகும் ஆபத்து! – அரசு கூறுகின்றது.

“கொரோனாவுடன் விளையாடக்கூடாது. போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. எதிரணியின் போராட்டத்தால் ‘சஜித் கொத்தணி’ உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.” – இவ்வாறு காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “மக்களை வீதியில் இறக்கி, சீரற்ற காலநிலையில்... Read more »

மன்னாரில் 15 நாட்களில் 328 கொரோனா தொற்றாளர்கள்!

மன்னாரில், நேற்று, 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 நாட்களில், 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக, இன்று விடுத்துள்ள... Read more »

பருத்தித்துறை வைத்தியசாலையில் நீரிழிவு நோயாளர்களுக்கான உணவு தாயாரிக்கும் போட்டி!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோயாளர்களுக்கான உணவு தாயாரிக்கும் போட்டி, யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு இடையில், இன்று நடைபெற்றது. இன்று காலை 10:30. மணிக்கு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், போட்டி நடத்தப்பட்டது. நீரிழிவு நோயாளர்களுக்கான போசாக்கான உணவு, பாதுகாப்பான உணவு,... Read more »

வவுனியா நகர சபை வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது!

வவுனியா நகர சபையின், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகர சபை அமர்வு, இன்று காலை 9.30 மணிக்கு, வவுனியா நகர சபையில், தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது, 2022 ஆம்... Read more »

மன்னாரில் திருவள்ளுவர் விழா.

திருவள்ளுவர் விழா, மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையில், மன்னார் மாவட்டச் செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா மற்றும் மன்னார் மாவட்ட கீதம் வெளியீட்டு விழா, இன்று... Read more »