மொத்த சனத் தொகையில் 15 வீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிப்பு.ஆ.பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன்.

மொத்த சனத் தொகையில் 15 வீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப் படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சமூகத்தால்  ஏற்பாடு செய்யப்பட்ட நீரிழிவு நோய் விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்


அவர் மேலும் தெரிவித்ததாவது தற்போதும் மக்களின் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் அதிக அளவில் நீரிழிவு நோய் ஏற்பட்டு வருவதாகவும். அதிலிருந்த மீள்வதற்கு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், நல்ல உணவுப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து நீரிழிவு விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட செயற்பாடு காலை 8 மணிக்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் வே.கமலநாதன் தலமையில்  நெல்லியடி நகர், வதிரி சந்தி  ஊடாக உடுபஸபிட்டி வதிரி வீதியால் மீண்டும் மாலுசந்தி சென்று ஆதரார வைத்திய சாலையில் நிறைவடைந்தது.

 இந்த சைக்கிள் விழிப்புணர்வு நிகழ்வினை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதஈஸ்வரன்   கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

 இதில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சமூகத்தமற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வை மேற்கொண்டனர்.

இதேவேளை இந்நிகழ்விற்கு பருத்தித்துறை பொலிஸார் மற்றும் நெல்லியடி பொலிஸார் ஆகியோரும் பூரண ஆதரவை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews