வெளிநாட்டிலிருந்து வழங்கிய பணத்திற்காக அரியாலையில் பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்ட இருவர் கைது!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தம்மிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த மாதம் 10ஆம் திகதி பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் CCTV காட்சிகளின் அடிப்படையில் , உடுவில் மற்றும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 18 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது , தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும் , தாக்குதல் நடத்துமாறு தமக்கு வெளிநாட்டில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் வாக்கு மூலத்தில் தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதனை அடுத்து , யாழில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு தொடர்பிருக்கா என பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews