மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய சந்நிதியான் ஆச்சிரமம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசங்களில் பின்தங்கிய நிலையில் உள்ள 14 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக சந்நிதியான் ஆச்சிரமத்தினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. மாந்தை கிழக்கு மு/விநாயகபுரம் அ.த.க பாடசாலையில் கல்விகற்கும் 5 மாணவர்களுக்கும் துணுக்காய் ஐயன்கன் குளம், தென்னியன்குளம், கோட்டை கட்டிய குளம் ஆகிய பாடசாலைகளில் கல்விகற்கும் 9 மாணவர்களுக்கும் என மொத்தம் 14 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நேற்று காலை இடம்பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள் , சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், துணுக்காய் பிரதேச சபையின் உப தவிசாளர் கெளரவ த.சிவகுமார், மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சரஸ்வதி, இ.தயாபரன் ஆகியோர் மாணவர்களிடம் துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews