மன்னாரில் திருவள்ளுவர் விழா.

திருவள்ளுவர் விழா, மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று நடைபெற்றது.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையில், மன்னார் மாவட்டச் செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா மற்றும் மன்னார் மாவட்ட கீதம் வெளியீட்டு விழா, இன்று காலை 9.30 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் இரத்திணம் நித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
இதன்போது, மன்னார் மாவட்டச் செயலக நுழைவாயிலில் இருந்து, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மண்டபம் வரை, திருவள்ளுவர் சிலை பவனியாக கொண்டு செல்லப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில், வருகை தந்த விருந்தினர்கள், கலைஞர்கள் இணைந்து, மன்னார் மாவட்ட கீதத்தை வெளியீடு செய்தனர்.
அதன் பின்னர், சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், திருவள்ளுவர் விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்வகளில் வெற்றி பெற்றவர்களும், இளம் கலைஞர்களும், பரிசில்கள் மற்றும் வெற்றி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில், மதத்தலைவர்கள் உள்ளடங்களாக பிரதேச செயலாளர்கள், கலைஞர்கள், திணைக்களத் தலைவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள், சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews