இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் நாட்டை முன்னேற்ற முடியாது.சி.அ.யோதிலிங்கம்

இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என்று அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநர் சி.அ.யோதிலிங்கம் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது . இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தினத்தில்... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடி நூதனசாலையை பார்வையிடும் நேரத்தில் மாற்றம்.

இன்று முதல் மட்டக்களப்பு காத்தான்குடி புராதன நூதனசாலையிணை பார்வையிடும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை அறிவித்துள்ளது. திங்கள் முதல் வியாழன் வரை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையும். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் காலை... Read more »

அழிந்துபோகும் நாட்டுக் கூத்தை காப்பாற்றுவோம்- மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் திமிலைதீவு திமிலை நளினகலா நாடகமன்றமும் இணைந்து ஏற்பாடுசெய்த ‘ஒல்லாந்தன் நந்திப்புல்’ வடமோடி கூத்து நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. திமிலைதீவு கிருஷ்ணன் ஆலய வளாகத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம... Read more »

மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர ஆலயத்தின் தேர்த்திருவிழா

மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா, இன்று அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேச திவி சாந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரிகள் இணைந்து, வழிபாடுகளை நடாத்தினர். விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள்,... Read more »

விபத்தில் உயிரிழந்த கன்றை, கண்ணீருடன் காவல் காத்த தாய்ப் பசு

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகே, வீதியோரம் நின்ற மாட்டுக் கன்றொன்ரை வாகனமொன்று மோதித் தள்ளிக் காயப்படுத்தியது. அருகே மேய்ந்து கொண்டிருந்த தாய்ப் பசு, தனது கன்று காயமடைந்து உயிருக்குப் போராடுவதை அவதானித்து, அதனருகே சென்று பாசப் போராட்டத்தில் ஈடுபட்டது. வாகனம் மோதி காயமடைந்த இளங்... Read more »

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை! வெசாக்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர், வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பொது மன்னிப்பில் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறு... Read more »

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

வளமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் அணிதிரளுமாறு இந்த புனித நாளில் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என வெசாக் பௌர்ணமிதின செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மூவித ரத்தினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பெர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக... Read more »

வடந்தை – 2023” நூலுக்கான ஆக்கங்கள் கோரல்…!

எமது திணைக்களத்தினால் வருடா வருடம் வெளியிடப்படும் வடமாகாண பண்பாட்டம்சங்களை உள்ளடக்கிய ‘வடந்தை’ நூலுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ளடக்கப்படுவதற்கான தரமான ஆக்கங்கள் எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கமைவான ஆக்கங்களை 26.05.2023 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக் கூடியவாறு அனுப்பி... Read more »

12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது…!(video)

12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர் பயணிப்பது தொடர்பில் இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக ஆணையிறவு பகுதியில் மறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவர்களிடமிருந்து 5000 ரூபா மற்றும்... Read more »

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் பிரதேச செயலர் முக்கிய தகவல்.

யாழ். தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை சட்டவிரோதமானது என தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீ தம்மிடம் தெரிவித்ததாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (04.05.2023)  இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி... Read more »