புத்தகம் வாசிக்காமல் பொழுதை ஒருநாளும் போக்காட்ட கூடாது, தூங்க கூடாது..! சட்டத்தரணி சோ.தேவராசா

புத்தகம் வாசிக்காமல் ஒருநாளும் பொழுதை போக்காட்ட கூடாது,  தூங்கக் கூடாது, புத்தகம் என்பது எங்களுக்கு பக்குவத்தை தருவது என சட்டத்தரணியும், பதில் நீதவானுமான சோ.தேவராசா தெரிவித்துள்ளார்.
சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஆண்மீக வெளியீடான ஞானச்சுடர் 316 வெளியீட்டு நிகழ்வில் மதிப்பீட்டு  உரையை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையால் மாதாந்தம்   வெளியீடு செய்யப்படும் ஆண்மீக மலரான ஞானச்சுடர் வெளியீடு இன்று காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் அமுத சுரபி கலாநிதி  செ.மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்றது.
பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் ஆரம்ப உரையினை சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினரும் ஓயவு பெற்ற ஆசிரியருமான சிவநாதன் நிகழ்த்தியதை தொடர்ந்து வெளியீட்டு உரையை விரிவுரையாளர் கணேசமூர்த்தி நிகழ்தியதை தொடர்ந்து மதிப்பீட்டு உரையினை மூத்த சட்டத்தரணியும், பதில் நீதிபதியுமான தேவராசா நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்பு பிரதிகளை வெளியீட்டு உரைகளை நிகழ்த்திய பதில் நீதிபதியும் சட்டத்தரணியுமான தேவராசா வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், அடியவர்கள், சிறப்பு பிரதிகள் பெற வந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews