இராணுவத்தை கண்டதும் வாள்களை வீசிவிட்டு தப்பி ஓடிய ரவுடிகள்! யாழ்.ஆவரங்காலில் சம்பவம்.. |

யாழ்.புத்துார் ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்த ரவுடிகள் இராணுவத்தை கண்டதும் வாள்களை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.  இச்சம்பவம் நேற்று மாலை ஆவரங்கால் வடக்கு பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரு குழுக்கள் மோதலுக்கு தயாராக இருப்பதாக ராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய... Read more »

யாழ்.நாவற்குழியில் விகாரை கட்டியபோது உறக்கத்தில் இருந்தவர்களுக்கு ஆரியகுளத்தின் மீது அக்கறை..! யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்.. |

யாழ்.ஆரியகுளம் புனரமைப்பு பணிகளில் எந்தவொரு மத சார்பு அடையாளங்களும் இடம்பெறாது. என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். ஆரியகுளம் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் குளத்தின் நடுவில் இந்து – பௌத்த பீடம் அமைக்கப்படவுள்ளதாக எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக இன்று காலை ஊடகங்களை சந்தித்து... Read more »

மத ஒற்றுமையை பாதுகாப்பதற்காக செய்த முயற்சியை அரசியல் சுயலாபங்களுக்காக மதவாதமாக மாற்றாதீர்கள்..! விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர்.. |

குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காக மத வாதத்தை துாண்டி மக்களை குழப்புவதை நிறுத்துங்கள். என கூறியிருக்கும் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர்,  விகாரைக்கு அருகில் சுற்றுலா மையத்தை அமைப்பது தொடர்பாக எனது அதிருப்தியை கூறினேனே தவிர விகாரை அமைக்க  முயற்சி செய்யவில்லை.... Read more »

யாழ். கோப்பாய் பகுதியில் கிளைமோர் மீட்பு!

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள காணி ஒன்றில் கிளைமோர் குண்டு இன்றைய தினம் சனிக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றினை துப்புரவு செய்ய முற்பட்டபோது இரும்பினாலான பொருளை காணி உரிமையாளர் அவதானித்துள்ளார். உடனடியாக கோப்பாய்... Read more »

பொதுப் போக்குவரத்துறை சேவை வழங்குனர்கள் மற்றும் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..!

பொது போக்குவரத்துச் சேவையை பயன்படுத்துவோர் மற்றும் பொது போக்குவரத்து சேவை வழக்குனர்களை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நாளை திங்கட் கிழமை தொடக்கம் இந்த கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் போது ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக. பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்... Read more »

ஒரு கிலோ பால்மா விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்பு…!

ஒரு கிலோ பால்மா விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1145 ரூபாவாக உயரும் என பால் மா இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின்... Read more »

காந்தியின் ஜனன தினம் இன்று தூதரகத்தில்….!

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. யாழிற்கான இந்திய துணைத்தூதர்... Read more »

போலீஸ் தடுப்பு காவலில் இருந்தவர் மரணம், மன்னாரில் சம்பவம்….!

மன்னார் எருக்கலம் பிட்டி – புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வைத்து மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை (2) காலை திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்... Read more »

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு 1லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம்! யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு.. |

மதுபோதையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவருக்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டிருக்கின்றார். யாழ்.கொழும்புத்துறையை சேர்ந்த குறித்த நபர் நேற்று நீதிமன்றில் முன்லைப்டுத்தப்பட்ட நிலையில் அவர் மீது மதுபோதையில்... Read more »

வடமராட்சி கிழக்கில் 372 கிலோ மஞ்சளுடன் இருவர் சிக்கினர்! (photo)

யாழ்., வடமராட்சி கிழக்கு பகுதியில் 372 கிலோகிராம் மஞ்சளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தாளையடிப் பகுதியில், கடல் மார்க்கமாகக் கடத்தி வரப்பட்ட மஞ்சளை இருவர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தபோது, மருதங்கேணிப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அவர்கள் சம்பவ... Read more »