ஒரு கிலோ பால்மா விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்பு…!

ஒரு கிலோ பால்மா விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1145 ரூபாவாக உயரும் என பால் மா இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய சிங்கள ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கூறினார். அதன்படி எதிர்வரும் வாரத்துக்குள் பால் மா தட்டுப்பாடு தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்  துறைமுகத்திலிருந்து பால் மா கொள்கலன்களை அகற்றுவதில் டொலர் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் கூறினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews