பொதுப் போக்குவரத்துறை சேவை வழங்குனர்கள் மற்றும் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..!

பொது போக்குவரத்துச் சேவையை பயன்படுத்துவோர் மற்றும் பொது போக்குவரத்து சேவை வழக்குனர்களை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நாளை திங்கட் கிழமை தொடக்கம் இந்த கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் போது ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக. பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்வதோடு , பஸ் அனுமதி பத்திரங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்  என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் மாகாணத்தில் சுமார் 6000 பஸ்கள் முன்னர் சேவையில் ஈடுபட்டன. ஆனால் கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 900 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டன.  காரணம் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் அந்த தொழில்களைக் கைவிட்டு வேறு தொழில்களுக்குச் சென்றுள்ளனர் .எவ்வாறிருப்பினும் எந்த காரணத்திற்காகவும் சுகாதார விதிமுறைகளை மீறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்

Recommended For You

About the Author: Editor Elukainews