மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு 1லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம்! யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு.. |

மதுபோதையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவருக்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டிருக்கின்றார்.

யாழ்.கொழும்புத்துறையை சேர்ந்த குறித்த நபர் நேற்று நீதிமன்றில் முன்லைப்டுத்தப்பட்ட நிலையில் அவர் மீது மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டியமை,

காப்புறுதிப் பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டியமை, வரிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டியமை, தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஆபத்தானமுறையில் வாகனம ஓட்டியமை, தலைக்கவசம் அணியாதவரை பின்னால் ஏற்றி சென்றமை,

பொலிஸாரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி பொலிஸார் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் எதிரி தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ஒப்புக்கொண்ட நிலையில்,  3 குற்றங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், மற்றய 4 குற்றங்களுக்கு 50 ஆயிரத்து 500 ரூபாய் தண்டமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews