யாழ்.கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களை அடித்து நொருக்கி, தீ வைத்துக் கொழுத்தி அட்டகாசம் புரிந்துள்ளது. நேற்றய தினம் இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்து வாள்கள், மற்றும் கோடரிகளை பொலிஸார் மீட்டிருக்கின்றனர். குறித்த காணியில் மிக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 09.30 மணியளவில் மானிப்பாய் பொலிஸாரினால் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 2... Read more »
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை விற்பனை செய்யும் முடிவு காலம் கடந்ததாக இருந்தாலும் அதனை நாங்கள் அதனை முழு மனதுடன் ஒத்துக்கொள்கிறோம். மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.... Read more »
எந்த துறையை எடுத்து கொண்டாலும் ஈழ தமிழ் இளையோர்கள் எவருக்கும் சளைத்தவர்களே அல்லர் என யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். அரியாலை வெட்டுக்குளம் ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயத்தின் கும்பாபிசேக வைபவமும், அதனோடு இணைந்த விழாக்களும் கடந்த ஒரு வார... Read more »
“நாம் முன்னோக்கிச் சென்று, ராஜபக்சக்களின் இந்தக் காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாஸவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரம் கோர்க்க வேண்டும்.” -இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்... Read more »
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திரா தேவி ரயிலுடன் மோதி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தைச் சேர்ந்த உதயகுமார்... Read more »
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட புத்தூர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்று நில அளவை திணைக்களத்தின் அளவீட்டின் பிரகாரம் தற்போது அமைந்திருக்கும் இடம் பொருத்தமற்றது என கோப்பாய் பிரதேச செயலகம் தகவல் அறியும் சட்ட மூலத்தில் பதில் வழங்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில்... Read more »
கிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில் புதையல் அகழ்வதற்காக இரண்டு வாகனங்களில் வந்த ஏழு பேர் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து புதையல் தேடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்கானர் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைதானவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஷ்டபிள்... Read more »
(உடுத்துறை) வடமராட்சி கிழக்கு பரதேச செயலக நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம் பெற்றுவருவதாக. செயலகத்திற்கு உட்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள், பிரதேச மக்கள் என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சமுர்த்தி வங்கிகளால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள், மானியங்கள், என்பவற்றில் வங்கிகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இடமாற்றம்... Read more »
மனிதநேய கண்ணிவெடி அகற்றும் தொழில் புரிந்து வந்த நபர் மீது நேற்றைய தினம் 23.01.2022 வாள் வெட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தொழில் நிமித்தம் நேற்று அதிகாலை வேலைக்காக புறப்பட்டு சென்றுகொண்டிருந்த வேளை புளியம்போக்கணை சந்திப் பகுதியில்... Read more »