கைதான 55 இந்திய மீனவர்களும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை..!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதான 55 இந்திய மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான ஆறு... Read more »

பொலிஸ் சிரேஸ்ட ஊடக பேச்சாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் நியமனம்..!

பொலிஸ் சிரேஸ்ட ஊடக பேச்சாளராக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீளவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு, மாவட்ட போக்குவரத்து மற்றும் சுற்றுலா பிரிவு ஆகியவற்றிற்கான. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக அஜித் ரோஹன... Read more »

தயா மாஸ்டருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டணை! வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு.. |

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடக பேச்சாளரான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், தடைசெய்யப்பட்ட அமைப்பான தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுடன்... Read more »

தறிகெட்டு ஓடிய மருத்துவர்கள் பயணம் செய்த கார்..! வீட்டு மதிலை மோதிதள்ளி தலைகீழாக கவிழ்ந்து விபத்து.. |

யாழ்.அரியாலை – மாம்பழம் சந்தியை அண்மித்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீட்டு மதிலை மோதித் தள்ளியதுடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது, இது குறித்து அங்கிருந்த மக்கள் கூறுகையில், கட்டுப்பாட்டை இழந்து கார் வீட்டு மதில்... Read more »

அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை! யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று உயர்மட்ட கலந்துரையாடல்.. |

யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மைய நாட்களில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தொிவித்திருக்கின்றன. இந்நிலையில் வைத்தியசாலையில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read more »

தமிழர்களும் முஸ்லீம்களும் எதிர்காலத் தலைமுறை பற்றி சிந்திப்பது அவசியம். சி.அ.யோதிலிங்கம்.

தமிழ்த்தேசிய கட்சிகளும் மலையக முஸ்லீம் கட்சிகளும் இணைந்து இந்திய அரசிற்கு அனுப்பவிருந்த ஆவணம் முஸ்லீம் கட்சிகள் கையொப்பமிட தயங்குவதால் பின்நிலைக்குச் சென்றுள்ளது. 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி இந்தியாவைக் கோரவிருந்த ஆவணம் பின்னர் “இலங்கை இந்திய ஒப்பந்தமும் தமிழ் மக்களின் அபிலாசைகளும்” என... Read more »

தமிழ்த் தேசியத்தை தமிழ்த் தேசியக் கட்சிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். சி.அ.யோதிலிங்கம்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கு அனுப்பவிருந்த ஆவணம் பலத்த இழுபறிக்கு மத்தியில் முடிவு செய்யப்பட்டு சனிக்கிழமை இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆவணத்தின் உள்ளடக்கம் பற்றி இக் கட்டுரை எழுதும் வரை எதுவும் தெரியவில்லை. “தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளும் இலங்கை... Read more »

இந்தியப்பிரதமருக்கான கடிதமும் தமிழ் மக்களும்…… சி.அ.யோதிலிங்கம்.

தமிழ்த்தேசியக் கட்சிகள் இந்தியப்பிரதமருக்கு அனுப்பப்பட என இருந்த கடிதம் இன்னமும் இந்தியத்தூதுவரிடம்  கையளிக்கப்படவில்லை. சம்பந்தன் நல்ல நாள் பார்த்து இந்தியத்தூதுவரிடம் கையளிக்க வேண்டும் என்பதற்காக தாமதப்படுத்தியிருந்தார். கடைசியில் கடந்த செவ்வாய் கையளிப்பதாக இருந்தது. தூதுவர் அவசரமாக டில்லி சென்றமையினால் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவில்லை. இந்த... Read more »

தோல்வியடைந்த தளங்களில் ஏற முனையும் சம்பந்தன்….!சி.அ.யோதிலிங்கம்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பாக தமிழ்த்தரப்பிலிருந்து பலத்த கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.  இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக எதுவும் கூறவில்லை என்பதற்காகவே இவை எழுந்துள்ளன. சம்பந்தன் பலத்த ஏமாற்றமடைந்துள்ளதாக பசில்ராஜபக்சவிற்கு நேரடியாகவே கோபத்துடன் கூறியுள்ளார். “நீங்கள் உருப்பட மாட்டீர்கள்” எனவும் சாபம் போட்டிருக்கின்றார். சம்பந்தனுக்கு... Read more »

பூஸ்டர் தடுப்பூசி பெறாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்வு..!

நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி பெறாமல் உள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்ந்துவருவதாக சுகாதார அமைச்சின் கொவிட்-19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி அன்வர் ஹம்தான கூறினார். மூன்றாம் டோஸை கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள்... Read more »