தோல்வியடைந்த தளங்களில் ஏற முனையும் சம்பந்தன்….!சி.அ.யோதிலிங்கம்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பாக
தமிழ்த்தரப்பிலிருந்து பலத்த கண்டனக் குரல்கள்
எழுந்துள்ளன.  இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக
எதுவும் கூறவில்லை என்பதற்காகவே இவை எழுந்துள்ளன.

சம்பந்தன் பலத்த ஏமாற்றமடைந்துள்ளதாக
பசில்ராஜபக்சவிற்கு நேரடியாகவே கோபத்துடன் கூறியுள்ளார்.
“நீங்கள் உருப்பட மாட்டீர்கள்” எனவும் சாபம்
போட்டிருக்கின்றார்.

சம்பந்தனுக்கு ஏமாற்ற உணர்வு வந்துள்ள போதும் தமிழ்
மக்களிடமிருந்து ஏமாற்ற உணர்வு எதுவும் வரவில்லை. இந்த
அரசு தொடர்பாக தமிழ் மக்களிடம் எந்த நம்பிக்கையோ
எதிர்பார்ப்போ இருக்கவில்லை. சம்பந்தனுக்கு பசில்ராஜபக்ச
ஏதாவது நம்பிக்கையை கொடுத்திருப்பாரோ தெரியாது. இந்த
நம்பிக்கையில்தான் இந்திய அரசின் அழைப்பையும் அவர்
புறக்கணித்திருக்கலாம்.
சம்பந்தனுக்கு வெளிநோக்கிய அரசியலில் அதாவது
சர்வதேசத்தை நோக்கிய அரசியலில் நம்பிக்கை குறைவு.
அதனால் எப்போதும் உள்நோக்கிய அரசியலில் தான்.

அதாவது இலங்கை அரசு நோக்கிய அரசியலில்  தான்
அக்கறை காட்டி வருகின்றார். நல்லாட்சிக்காலத்தில் இந்த
அணுகுமுறை தெளிவாகத் தெரிந்தது. அங்கேயும் அவர் முகக்
குப்புற விழுந்தார் என்பது வரலாறு.

சம்பந்தனின் இந்தப் போக்கிற்கு பல காரணங்கள்
இருந்திருக்கின்றன. அதில் முதலாவது அமெரிக்க – இந்திய
நகர்வுகளில் அவருக்கு நம்பிக்கை இல்லாமையாகும்.  இந்த
வல்லரசுகள் தமிழ் மக்களைப் பயன்படுத்தி தங்களுடைய
நலன்களைத்தான் அடைந்து கொள்ள முயற்சிக்கும் என அவர்
உறுதியாக நம்புகின்றார்.   அரசனை நம்பி புருசனை
கைவிட்டது” போலாகிவிடக்கூடாது என அவர் கருதுவது
போலத் தெரிகிறது.

இரண்டாவது காரணம் வெளிநோக்கிய அரசியல்
தொடர்ச்சியான தமிழ்த்தேசிய அரசியல் வேலைத்திட்டங்களை
வேண்டிநிற்கின்றது. சம்பந்தன் அதற்கு
தயாரில்லாமையாகும். வரலாற்று ரீதியாக ஒரு போதும் அவர்
பிரக்ஞை பூர்வ தமிழத்தேசிய அரசியலோடு தம்மை
அடையாளப்படுத்தியதில்லை. 1961 ம் ஆண்டு
சத்தியாக்கிரகத்தின் போது அவரும் கைது
செய்யப்பட்டடிருந்தார். அப்போது அவர் ஒரு இளம் சட்டத்தரணி
தனக்கும் இப்போராட்டத்திற்கும் ஒரு தொடர்புமில்லை என
எழுதிக் கொடுத்து விட்டு உடனடியாகவே வெளியில்
வந்திருந்தார்.

மூன்றாவது பெருந்தேசியவாதத்தோடு சம்பந்தன் முரண்பட
விரும்பாமையாகும். இதற்கு பாதுகாப்புப் பிரச்சினையோடு
அரசிலிருந்து தனக்கு கிடைத்துள்ள சலுகைகளும்
பறிபோய்விடும் என்ற அச்சங்களும் காரணங்களாக
இருக்கலாம்.
ஜனாதிபதி பெருந்தேசியவாதத்தின்  கைதியாகவும் யுத்த
வெற்றிவாதத்தின் கைதியாகவும், இருப்பதால் அவரது உரை
பெரிய ஏமாற்றங்கள் எவற்றையும் தமிழ் மக்களுக்கு
கொடுக்கவில்லை .
தமிழ் மக்கள் தற்போது அரசியல் தீர்வு என்கின்ற
அடிப்படைப்பிரச்சினை,  இன அழிப்பிற்கு நீதி கோரும்
பிரச்சினை, தாயகத்தில் தொடர்ச்சியாக இடம் பெறும் பச்சை
ஆக்கிரமிப்புப் பிரச்சினை , இயல்பு நிலையைக் கொண்டு
வருதல ; பிரச்சினை, அன்றாடப்பிரச்சினை , என ஐந்து
வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
அடிப்படைப்பிரச்சினையான அரசியல் தீர்வு
பிரச்சினையை ஜனாதிபதி தனது உரையில்
தொடவேயில்லை.  ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி
சார்ந்தவர்கள் பெயருக்காவது 13 வது திருத்தம் பற்றி
பேசுவார்கள். ஜனாதிபதி அதற்கும் தயாரில்லை.

அவரைப் பொறுத்தவரை இனப்பிரச்சினை என்ற ஒன்றே கிடையாது.
அபிவிருத்தி மூலம் தமிழ் மக்களின் மனதை மாற்றலாம் என்ற
நினைப்பம் அவரிடம் உள்ளது. ஆனால் தமிழ் மக்களைப்

பொறுத்த வரை இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லாத
அபிவிருத ;திகள் ஆக்கிரமிப்புக்களே ஒழிய அபிவிருத்திகளல்ல.
ஜனாதிபதி தனது உரையில் வடக்கு, கிழக்கினை
அபிவிருத்தி செய்வதற்கு தமிழப்பாராளுமன்ற உறுப்பினர்கள்
ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று கேட்டுள்ளாரே தவிர
அபிவிருத்தித் திட்டங்கள் எவற்றையும் முன்மொழியவில்லை.
யார் ஊடாக அவற்றை மேற்கொள்வது என்பது பற்றியும்
எதுவும் கூறவில்லை. அபிவிருத்திகள் மேற்கொள்வதாயின்
தமிழ் மக்களின் அதிகாரத ;திற்குட ;பட்ட உள்;ராட்சி
சபைகளினூடாகவும் மகாணசபைகளினூடாகவும் மேற்
கொள்ளலாம் ஆனால் அதற்கு அவரது அரசு தயாராக
இல்லை.
இரண ;டாவது பிரச்சினையான இன அழிப்பிற்கு நீதி
கோரும் பிரச்சினை பற்றியும் எதுவும் கூறவில்லை . காணாமல்
போனோர் விவகாரம் பற்றி அது இரு தரப்புக்கும் உள்ள
பிரச்சினை என மொட்டையாகவே கூறியிருக்கின்றார்.
குறைந்த பட்சம் சர்வதேச சமூகம் சிபார்சு செய்துள்ள
நிலைமாறுகால நீதிக்கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவது
பற்றிக்கூட எதுவும் கூறவில்லை. நிலைமாறுகால
நீதிக்கோட்பாடு உண்மையைக் கண்டறிதல் ,  நீதி வழங்குதல்
இழப்பீடு வழங்குதல்  , மீள நிகழாமையை உறுதி செய்தல்
என்பவற்றை சிபார்சு செய்கிறது. உண்மையில்
நிலைமாறுகால நீதி கூட தமிழ் மக்களுக்கு போதுமானது என
கூறிவிட முடியாது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம்
பெரும்தேசிய வாதத ;துடன் அதிகம் முரண்படக்கூடாது
என்பதற்காகவே இதனை சிபார்சு செய்துள்ளது. தமிழ்
மக்களுக்கு தேவையானது இன அழிப்புக்கான பரிகார நீதியே
ஒழிய நிலைமாறுகால நீதியல்ல
மூன்றாவது பிரச்சினையான ஆக்கிரமிப்புப் பிரச்சினை
பற்றியும் கூட எதுவும் கூறப்படவில ;லை ஆக்கிரமிப்பு என்பது
பெருந்தேசியவாதத ;தின ; நீண்டகால நிகழ்ச ;சி நிரல ;. தமிழ ;
மக்கள் ஒரு தேசமாக இருப்பதை அழிப்பது தான ; அதன்
இலக்கு. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இதைக்
கைவிடப்போவதில்லை ஏனெனில ; இது அரசாங்கங்களின ;

4

தீர்மானம் அல்ல. சிறீலங்கா அரசின்  தீர்மானம் அந்த அரசு
என்பது சிங்கள் பௌத்த அரசு தான் அதன் கோட்பாட்டு
அடிப்படை இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும்
உரியது என்பது தான்.
நான்காவது பிரச்சினை இயல்பு நிலையைக் கொண்டு
வருதல் பிரச்சினை. நிலைமாறுகால நீதிக் கோட்பாட்டுடன்
இது தொடர்புடையது. நிலைமாறுகால நீதிக் கோட்பாட்டின்
முக்கிய அம்சங்களில் ஒன்று மீள நிகழாமையை
உறுதிப்படுத்துவதாகும். இயல்பு நிலையைக் கொண்டு
வருவதன் மூலமும் அரசியல் தீர்வை நிறைவேற்றுவதன்
மூலமுமே இதனைச் சாத் தியமாக்க முடியும்.  இயல்பு
நிலையைக் கொண்டு வருதலில் அரசியல் கைதிகளின்.
விடுதலை, காணாமல்  போனோர் விவகாரம், படையினர்
கைப்பற்றிய காணிகளை விடுவித்தல் , படையினரின்
கெடுபிடிகளை நிறுத்துதல், ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல்,
பயங்கரவாத தடைச ;சட்டத ;தை நீக்குதல ; என பல
உள்ளடங்குகின்றன.
இவற்றில் அரசியல் கைதிகளின் விடுதலை, படையினர்
கைப்பற்றிய காணிகளை விடுவித்தல், பயங்கரவாத
தடைச்சட்டத்தை நீக்குதல் என்பன தொடர்பாக
மேலோட்டமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டனவே தவிர
உறுதியான கருத ;துக்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை.
படையினர் கைப்பற்றிய காணிகளில் 90 வீதம்
விடுவிக்கப்பட்டுள்ளன எனக் கூறியுள்ள போதும் கள நிலை
அதனை உறுதிப்படுத்துவதாக இல்லை. மறுபக்கத்தில்
படையினர் தொடர்ந்தும் காணிகளைப் பறிக்கும்
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்களும்
தொடர்ச்சியாக அதனை எதிர்த்து போராட்டங்களை
நடாத்துகின்றனர்.  அண்மையில் இடம் பெற்ற மாதகல்
பொராட்டம் இதற்கு சிறந்த உதாரணமாகும். போராட்டத்தில்
ஈடுபட்டவர்களின் படகுகள் கடல் படையினர் தாக்குதல்
நடாத்தினார்கள் என்றும் குற்றச் சாட்டுக்கள்
முன்வைக்கப்படுகின்றன.

ஐந்தாவது பிரச்சினை அன்றாடப் பிரச்சினை ஆகும். இந்த
அன்றாடப் பிரச்சினைகளில் பல போரினால்
ஏற்பட்டவையாகும்.  நீண்ட கால இன அழிப்பு காரணமாக
தமிழ் மக்கள் ஐம்பது வருடங்கள் பின்தங்கி இருக்கின்றனர்.
இந்த இடைவெளிகளை இலங்கை முழுவதற்கும் பொதுவான
சாதாரண செயல் திட்டங்கள் மூலம் நிரப்ப முடியாது. தமிழ்
மக்களை மட்டும் மையப்படுத்திய சிறப்புத்திட்டங்கள் இதற்குத்
தேவை.  இவை பற்றி எதுவும் ஜனாதிபதியின் உரையில்
குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் ,
இந்தியாவும் 13 வது திருத்தத்தை முழுமையாக
நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அக்கறை காட்ட
வேண்டும் என எதிர் பார்க்கின்றன. ஜெனிவா அறிக்கையிலும்
அது பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்உரை அவ் இரு
தரப்புக்களுக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம். தமிழ்
மக்கனின் நலன்களைக் குறைந்த பட்சமாவது பேணாது
அவர்களின் இந்தோ – பசுபிக் மூலோபாயத்திட்டத்தை
முன்னெடுக்க முடியாது.
இப்போ எழும் கேள்வி? தமிழ்ததரப்பு இந்தப் போக்கு
தொடர்பாக என்ன செய்யலாம் என்பதே!  தமிழ் மக்களுக்கு
கிடைத்த வரலாற்றுப் படிப்பினை சிறீலங்கா அரசு நோக்கிய
அரசியல் செயல்பாடுகள் வெற்றியைத்தராது என்பதே!
தமிழரசுக்கட்சியும் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியும்
அம்முயற்சியில் படுதோல்வி அடைந்துள்ளன.  எனவே தமிழ்
மக்கள் சர்வதேசம் நோக்கிய அரசியல் செயல்பாடுகளிலேயே
அதிக கவனம் செலுத்த வேண்டும். தேசிய அரசியல் மூலம்
தேசிய அரசியலை உருவாக்கலாம் , வளா்த்தெடுக்கலாம்.
ஆனால் சர்வதேச அரசியல் மூலமே தமிழ்த் தேசிய அரசியலின்
வெற்றி தீர்மானிக்கப்படும் என்ற பேராசிரியர் சிவத்தம்பியின்
கூற்றை இங்கு நாம் மறக்கக்கூடாது.
வெளி நோக்கிய அரசியல் செயல்பாடுகள் தொடர்பான
உரையாடலை இப்பொதே ஆரம்பிப்பது நல்லது

Recommended For You

About the Author: admin