இந்தியப்பிரதமருக்கான கடிதமும் தமிழ் மக்களும்…… சி.அ.யோதிலிங்கம்.

தமிழ்த்தேசியக் கட்சிகள் இந்தியப்பிரதமருக்கு அனுப்பப்பட என இருந்த
கடிதம் இன்னமும் இந்தியத்தூதுவரிடம்  கையளிக்கப்படவில்லை. சம்பந்தன் நல்ல நாள்
பார்த்து இந்தியத்தூதுவரிடம் கையளிக்க வேண்டும் என்பதற்காக
தாமதப்படுத்தியிருந்தார். கடைசியில் கடந்த செவ்வாய் கையளிப்பதாக இருந்தது. தூதுவர்
அவசரமாக டில்லி சென்றமையினால் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவில்லை. இந்த
மாதம் 18 ம் திகதி கையளிப்பதாக கூறியிருக்கின்றன.
கடிதத்தின் உள்ளடக்கம் பற்றி கையொப்பமிட்ட தேசியக்கட்டசிகள் உத்தியோக
பூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை ஆனாலும் தென்னிலங்கையின்
ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு தகவல்கள் கசிந்து உள்ளடக்கத்தை வெளியிட்டிருந்தது.
அதன் மொழிபெயர்ப்பு தமிழ்ப்பத்திரிகைகள் சிலவற்றிற்றிலும்
வெளிவந்துள்ளன. தமித்தேசியக் கட்சிகளினால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் தமிழ்
மொழி பெயர்ப்பையே படிக்க வேண்டிய அவல நிலை தமிழ் மக்களுக்கு எற்பட்டுள்ளது.
உள்ளடக்கத்தில் சாதகமான அம்சங்களும் உள்ளனர் பாதகமான அம்சங்களும்
உள்ளன அதே வேளை போதாமைகளும் உள்ளன.
தமிழ் மக்களைப் பொறுத்த வரை ஐந்து வகையான பிரச்சினைகளுக்கு முகம்
கொடுக்கின்றனா். அரசியல் தீர்வு என்கின்ற அடிப்படைப் பிரச்சினை இன
அழிப்புக்கு சர்வதேச நீதி கோரும் பிரச்சினை ஆக்கிரமிப்புப்
பிரச்சினை. இயல்பு நிலையைக் கொண்டு வருதல் பிரச்சினை அன்றாடப் பிரச்சினை
என்பவையே அவ் ஐந்தும் ஆகும். இவை பற்றி இக்கட்டுரையாளர் முன்னரும்
கூறியிருக்கிறார்.
இப்பிரச்சினைகளை ஏதோ ஒரு வகையில் ஆவணம் வெளிப்படுத்தியிருக்க
வேண்டும். ஆனால் போதியளவிற்கு வெளிப்படுத்தவில்லை என்றே கூறலாம்.  சிலபிரச்சினைகள் மேலோட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சில
வெளிப்படுத்தப்படவில்லை.  அரசியல் தீர்வு தொடர்பாக ஒன்றுபட்ட பிரிக்கப்படாத நாட்டின் கீழ்
தமிழ் பேசும் மக்கள் தமது வரலாற்று சிறப்பு மிக்க வாழ்விடப்பிரதேசங்களில்
கௌரவமாகவும் சுயமரியாதையுடனும் அமைதியுடனும் பாதுகாப்புடன் வாழவும்
அவர்களின் சுயநிர்ணய உரிமையை பிரயோகிக்கவும் வழியேற்படுத்தப்படல்
வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டியிருந்தாலும் தெளிவின்மை
காணப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கோட்பாட்டு அடிப்படையில் தேச
அங்கீகாரம் இறைமை அங்கீகாரம் சுயநிர்ணய உரிமை அங்கீகாரம்
சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆட்சிப் பொறிமுறை
என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும். அதே வேளை அரசியல் யாப்பு சட்ட
வடிவத்தில் கூட்டிருப்பு  கூட்டுரிமை  கூட்டடையாளம் என்பவற்றை பேணக்கூடிய வடக்கு –
கிழக்கு இணைந்த அதிகார அலகு சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள் ரூபவ் கூட்டு
அதிகாரத்தில் தேசமாக பங்கு பற்றுவதற்கான பொறிமுறை சுயாட்சி
அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்வற்றை கொண்டிருத்தல் வேண்டும். இதில்
கோட்பாட்டு அடிப்படை 1985 ம் ஆண்டு திம்பு மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டது.
அரசியல் யாப்பு அடிப்படை தமிழீழ விடுதலைப்புலிகளின் இடைக்கால யோசனை
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனைகள் வடமாகாண சபையின் தீர்வு
யோசனைகள்  என்பவற்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.
இந்த ஆவணம் முன்னைய வெளிப்படுத்தல்களை செம்மைப்படுத்தியதாக முன்னேறிய
அம்சங்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். ஆனால் ஆவணத்தின் வாசகங்கள்
ஏமாற்றத்தை தருவனவாகவே உள்ளன. தேசம்ரூபவ் இறைமை என்பன பற்றி எதுவும்
கூறப்படவில்லை சுயநிர்ணயம் பற்றியும் மொட்டையாகவே கூறப்பட்டுள்ளன.
கூட்டிருப்புரூபவ் கூட்டுரிமைரூபவ் கூட்டடையாளம் போதியளவிற்கு வெளிப்படுத்தப்படவில்லை.
பலவந்தமாக “பிரிக்கப்படாத நாடு” என்பது சேர்க்கப்பட்டுள்ளது. வலிந்து
பெருந்தேசியவாதிகளை திருப்திப்படுத்த வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை. உள்ளக
சுயநிர்ணயம் இருக்குமாயின் வெளியக சுயநிர்ணயம் அவசியமற்றது என்பது
நடைமுறை யதார்த்தமாகும். அதனை வலிந்து சொல்லுதல் தேவையற்றது ஆகும்.
தவிர தமிழ் பேசும் மக்கள் என்ற சொற்பதம்
பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. முஸ்லீம் தரப்பும் மலையகத்தரப்பும் விலகியுள்ள நிலையில் இந்த சொற்பதத்ததை பயன்படுத்தும் உரிமை தமிழ்த்தரப்பிற்கு கிடையாது.
குறிப்பாக முஸ்லீம்கள் இச் சொற்பதத்திற்குள் வரவிரும்பவில்லை என்பதை
வரலாற்று ரீதியாகவே வெளிப்படுத்தியுள்ளனர். எனவே தமிழ் மக்கள்  முஸ்லீம்
மக்கள் மலையக மக்கள் என்றே பயன்படுத்தியிருக்க வேண்டும்.
இரண்டாவது பிரச்சினையான இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரும்
பிரச்சினைபற்றி எதுவுமே கூறப்படவில்லை. இந்தியா விரும்பமாட்டாது எனக்
குறிப்பறிந்து தவிர்த்திருக்கிறார்களோ தெரியவில்லை. இந்தியா இரண்டு
பாரணங்களுக்காக சர்வதேச நீதி கோரும் பிரச்சினையை தவிர்த்தே வருகிறது. ஒன்று
இன அழிப்புக்குற்றம் நீண்ட விரிவான விசாரணைக்கு உட்படுத்தப்படுமாயின்
குற்றப்பட்டியலுக்குள் இந்தியாவும் வர வேண்டிய நிலை ஏற்படும். ஒரு வகையில்
பார்க்கும் போது மறைமுக நிலையில் இந்தியாவும் யுத்தத்தை நடாத்தியது எனக்
கூறலாம்.  இரண்டாவது இன அழிப்பு நிரூபிக்கப்பட்டால் தமிழ் மக்களின் வெளியக
சுயநிர்ணயத்தை ஏற்க வேண்டி வரும் அல்லது வலிமையான உள்ளக சுயநிர்ணயத்திற்கு
இந்தியா அழுத்தம் கொண்டு வரும். இரண்டுக்குமே இந்தியா தயாராக இல்லை என்பதே
யதார்த்தமாகும்.
ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தொல்லியல் திணைக்களம் மகாவலி அதிகார
சபை வனபரிபால திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் சுற்றுலாச்சபை
பாதுகாப்ப அமைச்சு என்பவற்றின் ஆக்கிரமிப்புக்களும் மாகாணத்தின்
எல்லைகளை மாற்றும் ஆக்கிரமிப்புக்களும்ரூபவ் பற்றியே கூறப்பட்டுள்ளன. இவை
ஆக்கிரமிப்பு செயற்பாட்டின் ஒரு பகுதிகளே
உண்மையில் ஆக்கிரமிப்புக்கள் குறிப்பாக நில ஆக்கிரமிப்புக்கள்
திட்டமிட்ட விவசாயக்குடியேற்றம் சட்ட விரோத விவாசயக் குடியேற்றம்
மீனவர் குடியேற்றம் வியாபாரக்குடியேற்றம் கைத்தொழில் குடியேற்றம்
புனித பிரதேசக் குடியேற்றம் முப்படை முகாம்களுக்கான குடியேற்றம் எல்லைகளை
மாற்றுவதனால் ஏற்படும் செயற்கைக் குடியேற்றம் என பல வழிகளில் இடம்
பெறுகின்றன இவையே போதியளவு வெளிப்படுத்தப்படவில்லை.

தவிர இனப்பிரச்சினை
என்பதே தமிழ்த்தேசத்தை தாங்குகின்ற தூண்களான நிலம்ரூபவ் மொழிரூபவ்
பொருளாதாரம்ரூபவ் கலாச்சாரம் என்பன அழிக்கப்படுவது தான். இவை பற்றி
சுருக்கமாகவேனும் போதிய விளக்கம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். மொழி
பற்றி 13 வது திருத்தத்தில் மொழி அமூலாக்கல் ஏற்பாடுகள் 16 வது

4

திருத்தத்திலுள்ள மொழி அமூலாக்கல் ஏற்பாடுகள் பற்றி கூறப்பட்டுள்ளன.
கலாச்சாரம் பொருளாதாரம் பற்றி எதுவும் கூறப்படவில்லை
இயல்பு நிலையைக் கொண்டு வருதல் பிரச்சினையில் அரசியல் கைதிகள்
விவகாரம் காணாமல் போனோர் விவகாரம் இராணுவம் பறித்த காணிகள்
விடப்படாமை என்பவை முக்கியமானவையாகும். அவை பற்றி எதுவும் கூறப்படவில்லை
பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது. அது வரவேற்க்கத்தக்கதே! அரசியல்
கைதிகள் விவகாரத்தில் அரசியல் தீர்மானம் ஒன்றின் மூலம் அரசியல் கைதிகள்
நிபந்தனையின்றி விடுவிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைத்திருக்கலாம். அதே போல காணாமல் போனோர் விவகாரத்தில் சர்வதேச
ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிலைமாறு கால நீதி ஏற்பாடுகளான உண்மையைக்
கண்டறிதல்  நீதி வழங்குதல் இழப்பீடு வழங்குதல்ரூபவ் மீள நிகழாமையை
உறுதிப்படுத்துதல் என்பவற்றினை முன்வைத்திருக்கலாம்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஐந்தாவது பிரச்சினையான
அன்றாடப்பிரச்சினை பற்றி எதுவும் முன்வைக்கப்படவில்லை.
அன்றாடப்பிரச்சினையின் கனதி நீண்டகால போரினாலும்  இன
அழிப்பினாலும் ஏற்பட்டவையாகும் இதனால் தமிழ் மக்கள் ஐம்பது வருட காலம்
பின்தங்கியிருக்கின்றனர். வழமையான அரசின் திட்டங்கள் மூலம் கனதியான
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அதற்கென சிறப்புத்திட்டங்கள் தேவை .
சர்வதேச பங்குபற்றுதல்களுடன் கூடிய சிறப்புத்திட்டங்களே இதற்கு உதவுவனவாக
இருக்கும். போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்கள் இதில் முக்கியமானவை. ஷெல்
துண்டுகளை உடம்பில் ஏற்றி பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்களும் உள்ளனர் என்பதை
இவ்விடயத்தில் நாம் மறக்கக்கூடாது. விதவைகளின் பிரச்சினை பாரிய
சமூகப்பிரச்சினையாக வளர்ந்துள்ளது. அதனையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
மலையக முஸ்லீம் மக்களின் அபிலாசைகளும் இங்கு சேர்க்கப்பட்டமை
வரவேற்க்கத்தக்கதே. மலையக மக்களின் நில உரிமை வீட்டு உரிமை அரசியல்
பிரநிதித்துவம் கல்வி உரிமை என்பன பற்றி கூறப்பட்டமை மகிழ்ச்சி
தரக்கூடியதே!  மலையக மக்கள் தொடர்பாக தமிழ் மக்களின் வரலாற்று அக்கறை இங்கு
மீள உணர்த்தப்பட்டுள்ளது. மலையக மக்களுக்கு சாதகமான விகிதாசார பிரதிநிதித்துவம்
பற்றிக் கூறியமையும் வரவேற்க்கத்தக்கதே!
முஸ்லீம் மக்கள் இன்று எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சினை கலாச்சார
அழிப்பே! “ஒரு நாடு ஒரு சட்டம்”; என்ற கோட்பாட்டின் மூலம் முஸ்லீம் சட்டத்தில் உள்ள கலாச்சார ஏற்பாடுகள் அழிக்கப்படுவதற்கு முயற்சிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.  இது பற்றி கூறியமை எதிர்காலத்தில் முஸ்லீம்
மக்களுடன் உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு வாய்ப்புக்களை உருவாக்கும்.
13 வது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படல் வேண்டும் என பிரதானமாகக்
கூறப்பட்டுள்ளது. இக்கட்டுரையாளர் ஏற்கனவேயும் கூறியபடி 13 வது திருத்தம்
ஒற்றையாட்சிக்குட்பட்ட ஒரு கட்டமைப்பு. இதன்படி மாகாண சபைகளுக்கு சுயாதீனமான
இருப்பு எதுவும் கிடையாது.  13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதனால் தமிழ்
மக்களுக்கு எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை எனவே 13 வது திருத்தத்திற்கு
திருத்தங்களை முன்வைத்திருக்க வேண்டும்.  குறிப்பாக மாகாணசபை நிரலிலுள்ள
விடயங்களில் சுயாதீனமான அதிகாரங்கள் இருக்க வேண்டும். ஒருங்கிய நிரல்
நீக்கப்பட்டு அவை மாகாண சபை நிரல்களுடன் சேர்க்கப்படல் வேண்டும். ஆளுநர்
பெரியளவு நிர்வாகியாக மாற்றப்படல் வேண்டும் அல்லது அமெரிக்கா போல
மாகாண மக்களினால் தெரிவு செய்யப்படல் வேண்டும்ரூபவ் வடக்கு – கிழக்கு இணைக்கப்படல்
வேண்டும் என்கின்ற திருத்தங்களை முன்வைத்திருக்கலாம்.
தற்போது ஆவணப்பணி முடிவடைந்து விட்டது. இதன் அடுத்த கட்டம் என்ன என்பது
பெரும் கேள்வியாக உள்ளது. 13 வது திருத்தத்திற்கு திருத்தங்களைக் கொண்டு வரும் படி
அழுத்தங்களைக் கொடுப்பது அதனை ஆரம்பப்புள்ளியாகக் கொள்வதற்கு
வலுச்சேர்க்கும். தவிர கொழும்பில் அதிகளவில் தங்கியிராத இருப்பு தற்போது
தமிழ் மக்களுக்கு அவசியமாக உள்ளது. அந்த இருப்பைக்கட்டியெழுப்புவதில்
இந்தியாவின் பங்களிப்பைக் கோரலாம். குறிப்பாக இந்திய முதலீடுகள் . தமிழ்
நாட்டிற்கான பாலம் என்பவை இது விடயத்தில் ஆரோக்கியமான சூழலைத்தருபவை
இந்தியச் சந்தையையும் தமிழ் மக்களுக்கு திறந்து விடும்படி கோருவது அவசியம்.
“தமிழ்த்தேசத்தைக் கட்டியெழுப்புதல்” தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய சவால் .
இந்த முயற்சிகள் அதற்கு ஏதோ ஒரு வகையில் உதவுமாக இருந்தால் அதுவே கடித
முயற்சியின் முக்கிய பயனாக இருக்கும்.

Recommended For You

About the Author: admin