யாழ்.கொக்குவில் – நந்தாவில் பகுதியில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..! வாகனங்கள் தீக்கிரை, வீடு சேதம்.. |

யாழ்.கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களை அடித்து நொருக்கி, தீ வைத்துக் கொழுத்தி அட்டகாசம் புரிந்துள்ளது.

நேற்றய தினம் இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய வன்முறை கும்பல் வீட்டினுள் புகுந்து

யன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டது. பின்னர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அடித்து நொறுக்கியத்துடன் , காருக்கும் தீ வைத்துள்ளனர்.

அத்துடன் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தீ வைத்துள்ளனர். இச்சம்பவத்தில் காருக்கு வைக்கப்பட்ட தீ பெரியளவில் பரவாத நிலையில்,

கார் சேதமடைந்துள்ளத்துடன் மோட்டார் சைக்கிள் இரண்டும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews