வடமராட்சி கிழக்கு பரதேச செயலகத்தில் பல்வேறு  முறைகேடு, பலர் விசனம்…!

(உடுத்துறை)
வடமராட்சி கிழக்கு பரதேச செயலக நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம் பெற்றுவருவதாக. செயலகத்திற்கு உட்பட்ட அதிகாரிகள்,  பணியாளர்கள், பிரதேச மக்கள் என பலரும்  விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சமுர்த்தி  வங்கிகளால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள், மானியங்கள், என்பவற்றில் வங்கிகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இடமாற்றம் எதுவும் இன்றி உயர் பதவிகளில் இருப்பவர்களே இவ்வாறான பயனாளிகள் தெரிவில் ஈடுபட்டு தமக்கு வேண்டியவர்களை தெரிவு செய்வது,  பிரதேச செயலகம், கமநல திணைக்களம், சமுர்த்தி வங்கி ஆகியவற்றால் பல தடவைகள் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கணவர் மற்றும் மனைவி ஆகியோரது பெயரில் இரண்டு கிணறுகளை வழங்கியவர்களுக்கு மீண்டும் விவசாய உபகரணங்கள்  வழங்கியுள்ளதாகவும்,  ஒருவருக்கு சிற்றுழவூர்தி வழங்கப்பட்டுள்ளதாகவும்,  இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பலருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட வேறு தொழில் செய்யும் பிள்ளைகள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை சமுர்த்தி வங்கிகளிலிருந்து பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாவும், ஆனால் ஒருசிலருக்கு பிரதேச செயலர் மற்றும் சமுர்த்தி உயர் அதிகாரிகளின் செல்வாக்கில் இடமாற்றம் வழங்கப்பட்டும் அவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அதே வேளை
பரதேச செயலரது உறவினரான பிறிதொரு சமுர்தி உத்தியோகத்தரது உறவினருக்கு  அவரது சொந்த ஊரான வத்திராயனில்  பல காணிகள் இருக்கின்றபோதும்,  அம்பன் பகுதியில் காணி வழங்கப்பட்டு அவருக்கு வீட்டுத்திட்டம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொண்டதாகவும், அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த பரதேச செயலக சாரதியும் அப்பகுதி சமூக மட்ட அமைப்பு தலைவருமான  ஒருவர் தமது ஊரில் இவ்வாறு வழங்க கூடாது என பிரதேச செயலரிடம் கோரிக்கை விடுத்ததனால் பரதேச செயலரது வாகனம் செலுத்துவதில் இருந்து நிறுத்தப்பபட்டு வேறு வாகனம் செலுத்த மாற்றப்பட்டுள்ளார்.
இதே வேளை சமுர்தி வங்கிகளில் இடமாற்றம் வழங்கப்பட்டும் ஏன் இடமாற்றம் வழங்கப்படவில்லை என கணக்காய்வு பிரிவு கேள்வி எழுப்பியிருந்தும் அதற்கும் செவிமடுக்காத உயர் அதிகாரிகள் இதுவரை இடமாற்றம் வழங்கவில்லை என்பதுடன் அதற்கு பதிலளிக்காதுள்ளதாகவும் அறியமுடிகிறது.
மேலும் வடமராட்சி கிழக்கில் மணல்காடு, குடத்தனை,  அம்பன், நாகர்கோவில், பகுதிகளில் வீடில்லாதவர்களுக்கு வீடு வேண்டும் என்றால் மணல் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லையேல் வீட்டுத் திட்டம் இல்லை என பரதேச செயலர் கூறிவருவதாகவும் குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட சமுர்தி வங்கிகளிலேயே பல பணியாளர்கள் இட மாற்றம் தனிப்பட்ட சலுகை வழங்கல் போன்ற விஷயங்களில் பல்வேறு  முறைகேடுகள் இடம் பெற்று வருவதாகவும், சமுர்தி வங்கிகளில் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இடமாற்றம் வந்தும் இடம் மாறி செல்லாதவர்குக்கும், பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இட மாற்றம் இன்றி பணியாற்றும் அதிகாரிகளுக்கும்  மாவட்ட அபிவிருத்தி குழு தலமையும் ஆதரவு வழங்குவதாகவும் பாதிக்கப்பட்ட தரப்புகள் மேலும் தெரிவிக்கின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews