மதுபான நிலையம் பொருத்தமற்ற இடத்தில் அமைந்துள்ளது என்றதை ஒப்புக்கொண்டுள்ள பிரதேச செயலகம், அதே மதுபான நிலையத்திற்கு அனுமதியும் வழங்கியது..!

யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட புத்தூர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்று நில அளவை திணைக்களத்தின் அளவீட்டின் பிரகாரம் தற்போது அமைந்திருக்கும் இடம் பொருத்தமற்றது என கோப்பாய் பிரதேச செயலகம் தகவல் அறியும் சட்ட மூலத்தில் பதில் வழங்கியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட புத்தூர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தனியார் மதுபான நிலையம் ஒன்றின் அமைவிடம் சட்டவிரோதமானத் தெரிவித்து வலி கிழக்குப் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரனால் தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக

எழுப்பபட்ட கேள்விக்கே  இவ்வாறு பிரதேச செயலகம் பதில் வழங்கியுள்ளது. 30/07/2018 புத்தூர் பிரதேச சபையில் குறித்த மதுபான நிலையம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரனால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

குறித்த பிரேரணை சபையின் ஏகமனதாக தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த மதுபான நிலையத்திற்கு வியாபார அனுமதிப்பத்திரம் வழங்குவதில்லை என புத்தூர் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதவி மதுவரி ஆணையாளருக்கு எழுத்துமூலம் தெரிவித்திருந்தார்.

மதுபான நிலையத்துக்கு அருகில் வைத்தியசாலை ,முதியோர் இல்லம் ,சந்தை , வழிபாட்டிடம் காணப்படுவதால் அதனை அகற்ற வேண்டுமென பிரதேச செயலகத்திற்கும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்ட நிலையிலும் கோப்பாய் பிரதேச செயலகம் தொடர்ந்தும் குறித்த மதுபான நிலையத்திற்கு உத்தரவுப்பத்திரம் வழங்கப்பட்டு வந்தது. இன் நிலையில் மதுபான நிலையத்தின் தூரம் தொடர்பில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்பட்ட நிலையில் குறித்த இடம் பொருத்தமற்றது என சிபாரிசு வழங்கப்பட்டது.

இலங்கை மதுவரி திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற விடுவிப்புச் சான்றிதழ் உரிமக் கட்டணம் சரியாக அறவிடப்பட்ட கடந்த வருட உரிமம் உள்நாட்டு இறைவரி ஆணையாளரிடம் இருந்து பெற்றுக் கொண்ட விடுவிப்பு சான்றிதழ். என்பவற்றைக்கு அமைவாக 2020.12.16 இலங்கை மதுவரி திணைக்களத்தால்

வழங்கப்பட்ட கடிதத்துக்கு அமைவாக மூன்று மாதங்களுக்கு மட்டும் எனத் தெரிவித்து கோப்பாய் பிரதேச செயலகம் உத்தரவுப் பத்திரம் வழங்கியது.இவ்வாறான நிலையில் முறைப்பாட்டாளர் மீண்டும் பிரதேச செயலகத்திறகு விண்ணப்பித்த தகவல் அறியும் சட்ட மூலத்தில்

தொடர்ந்தும் மதுபானசாலை இயங்குகிறது எவ்வாறு என வினாவியிருந்தார்.குறித்த தகவல் அறியும் சட்டமூலத்திற்கு பதில் வழங்கிய கோப்பாய் பிரதேச செயலகம் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் கடிதத்திற்கு அமைய 7 மாதங்கள் விற்பனை உத்தரவு பத்திரத்தை மீண்டும் வழங்கியதாகப் பதில் வழங்கியது.

கோப்பாய் பிரதேச செயலகம் குறித்த மதுபான நிலையம் பொருத்தமற்ற இடத்தில் காணப் படுவதால் அதனை பிறிதொரு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கூறி தொடர்ச்சியாக மதுபான நிலையத்திற்கு உத்தரவு பத்திரத்தை புதுப்பித்தே வருகிறது.இவ்வாறு பிரதேச செயலாளர் செயற்படுவது அரசியல் அழுத்தமா?

அல்லது அரசியல் நிகழ்சி நிரலில் செயற்படுகிறாரா? என்ற சந்தேகம் எழுகின்றது.ஆகவே குறித்த விடயம் தொடர்பில் கோப்பாய்ப் பிரதேச செயலாளர் மக்கள் நலன் கருதி உறுதியாக முடிவெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews