75 நிமிடங்கள் கடலில் மிதந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு!

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், இரு கைகளிலும், இந்திய தேசிய கொடியை ஏந்தி, பாக் ஜலசந்தி கடலில், ஜல யோகா செய்து, தொடர்ந்து 75 நிமிடங்கள் மிதந்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.... Read more »

கல்வியங்காட்டில் திருட்டு போன மோட்டர் சைக்கிள் மீட்பு!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு கலைமகள் வீதியில் அமைந்துள்ள வீடோன்றில் நேற்று முன்தினம்  நள்ளிரவு (12) திருடப்பட்ட டிஸ்கவர் மோட்டர் சைக்கிள் நேற்று (13) காலை பொது மக்கள் உதவியுடன் தச்சன் தோப்பு பிள்ளையார் கோவில் முன்பாக நிறுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் தச்சன்... Read more »

சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு கிளிநொச்சியில் மரநடுகை…..!

 சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் கரைச்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் மரநடுகை மற்றும் நகரத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று காலை முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் மர நடுகை முன்னெடுக்கப்பட்டதுடன், டிப்போ... Read more »

அக்கராயன் கிழக்கு கிராம மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்ட சிறீதரன் எம்.பி.

கிளிநொச்சி அக்கராயன் கிழக்கு மக்களின் தேவைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கேட்டறிந்து கொண்டார். அக்கராயன் கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் நேற்று  முன் தினம் கிராம மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் மிகவும்... Read more »

பாடசாலைகள் இனி வழமை போன்று…!

நாடு முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி  திங்கட்கிழமை முதல் அனைத்து அரச பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களும் வழமை போன்று  இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.. இவ் அறிவிப்பு நேற்று வெளியாகியள்ளது. Read more »

காணி அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடமாகாண ஆளுநரால் விடுக்கப்பட்ட அறிவிப்பு….!

வடமாகாணத்தில் காணி மோசடியினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது விபரங்களை ஆளுநர் செயலகத்தில் சமர்ப்பிக்கும்படி ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்திருக்கின்றார். இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடமாகாணத்தில் தனியார் காணிகள் பலவற்றை பல்வேறு வழிகளில் மோசடி செய்து ஆக்கிரமித்துள்ள சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை... Read more »

விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவு முக்கியஸ்த்தர் அபுதாபியில் கைது!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவை சேர்ந்த முக்கியஸ்த்தர் ஒருவர் அபுதாபியில் கைது செய்யப்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. விடுதலை புலிகள் அமைப்பின் வெடிபொருட்கள் தொடர்பிலான விஷேட நிபுணத்துவம் உடைய புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தரே அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு... Read more »

யாழ்.யோக வித்யா பீடத்தினால் யோகா வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன..!

யாழ்.யோக வித்யா பீடத்தினால இலவசமாக யோகக்கலை வகுப்புகள் திருநெல்வேலி வடக்கு பழங்கிணற்றடி பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் இன்றைய தினம்  13.08.2022 ஆம்  ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்று ஆரம்பிக்கப்படவுள்ள போகா வகுப்புகள் சனி, ஞாயிறு தினங்களில் காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரையும் ... Read more »

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை விரட்டியடித்த மக்கள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடைய போராட்டத்தில் கலந்துகொண்டு உள்நாட்டு விசாரணை வேண்டும் என கோஷமிட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் விரட்டியடித்துள்ளனர். கிளிநொச்சியில் நேற்று 12/08 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் போராட்டம்... Read more »

சிபெட்கோ விநியோகஸ்தர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானம்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் தொடக்கம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) தனது விநியோகஸ்தர்களுக்கு (எரிபொருள் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு) அவர்களின் வருமானத்தில் 45 வீதத்தை வரியாக விதித்துள்ளது. இதன் காரணமாக எரிபொருள்... Read more »