யாழ்.யோக வித்யா பீடத்தினால் யோகா வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன..!

யாழ்.யோக வித்யா பீடத்தினால இலவசமாக யோகக்கலை வகுப்புகள் திருநெல்வேலி வடக்கு பழங்கிணற்றடி பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் இன்றைய தினம்  13.08.2022 ஆம்  ஆரம்பிக்கப்படவுள்ளன.

இன்று ஆரம்பிக்கப்படவுள்ள போகா வகுப்புகள் சனி, ஞாயிறு தினங்களில் காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரையும்  நடைபெறவுள்ளது.

இவ்வகுப்புகளில் 16 வயதிற்கு மேற்பட்ட இருபாலாரும் கலந்து கொண்டு பயிற்சியை பெறமுடியும் எனவும்,  சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்ட இவ்  அடிப்படை யோகா  கற்கைநெறியை பயிலவிரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இன்று சனிக்கிழமை  நேரில் வந்து பதிவுகளை மேற்கொண்டு இவ் வகுப்புகளில் இணைந்து கொள்ள முடியும் எனவும்,  மேலதிக தகவல்களை 0771041455 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews