விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவு முக்கியஸ்த்தர் அபுதாபியில் கைது!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவை சேர்ந்த முக்கியஸ்த்தர் ஒருவர் அபுதாபியில் கைது செய்யப்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

விடுதலை புலிகள் அமைப்பின் வெடிபொருட்கள் தொடர்பிலான விஷேட நிபுணத்துவம் உடைய புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தரே அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராசநாயகம் தவனேசன், எனும் 48 வயதான குறித்த சந்தேக நபர், அபுதாபி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கையிலிருந்து அபுதாபி சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார்,  குறித்த நபரை அபுதாபி பொலிஸாரிடமிருந்து பொறுப்பேற்று நேற்றுமுன்தினம் 11ம் திகதி இலங்கைக்கு கொண்டுவந்துள்ளதாக தொியவருகின்றது.

கொழும்பு மற்றும் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் தொடர்பில்  குறித்த சந்தேகநபர் பிரதானமானவர் என கூறும் பொலிஸார், இறுதி யுத்த காலப்பகுதியில் நாட்டிலிருந்து தப்பிச் சென்ற புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பட்டியலில் அவர் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அழைத்து வரப்பட்ட சந்தேக நபரிடம் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews