ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமானது –

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜெனீவாவில்  இந்த கூட்டத்தொடர் ஆரம்பமானது. முதலாவது தினத்திலேயே இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம்,... Read more »

சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைவாக சாலியவௌ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அளுத்கம, புளியங்குளம் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு... Read more »

முச்சக்கர வண்டியின் சாரதி கூரிய ஆயுதத்ததால் தாக்கப்பட்டு படுகொலை….!

கந்தான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று கந்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானை சாந்த செபஸ்தியன் மாவத்தைப் பகுதியில் இன்று (13) அதிகாலை 4.00 மணியளவில் இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »

யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட பீடாதிபதியாக சுரேந்திரகுமாரன் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ் ரவிராஜின் பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து புதிய பீடாதிக்கான தேர்தல்  இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. மருத்து... Read more »

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம்…!

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்கவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் களனி பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். அவர் மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த முறைப்பாடுகளை அடுத்து இந்த இடமாற்றம் பொலிஸ் உயர்மட்டத்தினால் வழங்கப்பட்டுள்ளது. களனி பொலிஸ் பிராந்தியத்தில் பொலிஸ்... Read more »

ஆழ்கடல் கடலட்டை தொழிலில் ஈடுபட்ட ஒருவரை மூன்று நாளாக காணவில்லை,தேடும் பணிகள் மூன்றாவது நாளாகவும் தீவிரம்…..!

நேற்று முன்தினம் சனிக்கிழமை கடலட்டை பிடிப்பதற்க்காக சென்ற திருகோணமலை குச்சவெளியை சேர்ந்த  30 வயதுடைய சுயூட்கான் பாஜத்கான் எனும் இரண்டு குழந்தைகளின் தந்தை  காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது காணாமல் போன நபர் கடலில் சுமார் எண்பது  அடி ஆழத்தில் ஒட்சிசன்... Read more »

யாழில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் மரணம்….!

யாழ். நகரில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முதியவர் ஒருவர், அவரின் வீட்டு வாசலில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சின்னத்தம்பி சாந்தகுணமூர்த்தி (வயது 67) என்னும் யாழ்.பொம்மை வெளியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். சைக்கிளில் பால் விற்பனையில்... Read more »

சீனாவின் அதிமுக்கிய விருதை வென்றுள்ள இலங்கை பேராசிரியர் –

இலங்கையின் பேராசிரியர் மலிக் பீரிஸுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான “எதிர்கால அறிவியல் பரிசு (Future Science)இலங்கையில் உள்ள சீன தூதரகத்தால் வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் மலிக் பீரிஸ் தவிர, சீன பேராசிரியர் யூன் குவோக்யுங்கிற்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பவதி பெண் உயிரிழப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விசேட சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட கர்ப்பவதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்.நாவாந்துறை பகுதியை சேர்ந்த ராஜன் மரியதெஸ்ரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 1ம் திகதி காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலக மற்றும் சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 20 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனையில் 160 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர்... Read more »