ஆலயத்தில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பெண்ணுக்குக் கொரோனா!

யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் கோயில் வாசலில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ஸ்ரீ ராஜேந்திரா சந்திரவதனா (வயது 68) என்பவர் நேற்றுமுன்தினம் யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையிலிருந்து யாழ்., கொட்டடி ஆலயம் ஒன்றுக்கு வந்திருந்தார்.

ஆலய வாசலில் நின்றிருந்தபோது திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்திருந்தார்.

அவருடைய மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார்.

அதன் தொடராக நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த பெண்ணுக்குகே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews