மேலும் 135 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 11,431 கொவிட் மரணங்கள்..!

– 71 ஆண்கள், 64 பெண்கள்

– 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 109 பேர்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 135 மரணங்கள் நேற்று (12) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 11,296 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 135 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 11,431 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.

இவ்வாறு மரணமடைந்த 135 பேரில், 71 பேர் ஆண்கள், 64 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 1209 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews