சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக சாலியவௌ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அளுத்கம, புளியங்குளம் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோதவௌ காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், 30 லீற்றர் மதுபானம், 1050 லீற்றர் கோடா, பீப்பாய்கள் 05, பிளாஸ்டிக் பீப்பாய்கள் 04 உள்ளிட்ட பொருட்களுடன் 43 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முருங்கன் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கெபற்றிக்கொல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதவௌ காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து காடழிப்பில் ஈடுபட்ட நபரொருவரை பொலிஸ் கைதுசெய்துள்ளனர்.

சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு இதன்போது அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பராங்கியாவிடிய, ஹொரவப்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எலயாபத்துவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனெவ காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோதமாகக் காட்டுக்குள் நுழைந்து காடழிப்பில் ஈடுபட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 34, 37, 47, 59 வயதுடைய நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காலி துறைமுகம் பொலிஸ் பிரிவு மாத்தறை வீதி, தேவெட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தீர்வை வரியின்றி இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 5000 புகைப்பொருட்களுடன் நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மக்குளுவ காலி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதுருஓயா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், மாதுருஓயாவுக்கு டிரக்டர் வண்டியைக் கொண்டுசென்று மணல் ஏற்றிக்கொண்டிருந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நாமல் கம, வெலிக்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews