இ.போ.ச வடபிராந்திய பிரதம பொறியியலாளர் நியமனத்தின் பின்னால் அரசியல் செல்வாக்கு..! தமிழ் அரசியல் தலைமைகள் கள்ள மௌனம்.. |

.போ.ச வடமாகாண பிராந்திய பிரதம பொறியியலாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண பிராந்திய பொறியியலாளராக கடமையாற்றிய எஸ்.பாஸ்கரன் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றதை அடுத்து அவரது இடத்திற்கு  இ.போ.சபையின் திருகோணமலை சாலையில் பொறியியலாளராக கடமையாற்றிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் வடக்கு பொறியியலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இ.போ.சபையின் வடமாகாணத்தில் உள்ள 7 சாலைகளில் சாலை பொறியியலாளராக கடமையாற்றுகின்றவர்களில் பலர் தகுதியுடன் இருக்கும் நிலையில்

இவ்வாறு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்தது தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் மௌனம் காத்து வருகின்றனர்.

தற்போது வடமாகாண பொறியாளராக நியமிக்கப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் அனுராதபுர சாலை பொறியியலாளாராக இருக்கும்போது  பல குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் உரிய வகையில் விசாரணை செய்யப்பட்டு முடிவடைவதற்கு முன்னர்  வட பிராந்தியத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமை அவர் குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்புவதற்கு உரிய சூழலை ஏற்படுத்தும்.

வட பிராந்திய சாலைகளில் பிராந்திய பொறியியலாளராக நியமனம் பெறுபவர்கள் சேவைக் காலம் மற்றும் மொழியறிவு என்பன பரிசீலிக்கப்பட்டு  திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படுவது வழமை. ஆனால் தற்போது நியமனம் பெற்றவர் எவ்விதமான போட்டிப் பரீட்சைகள் இடம்பெறாமல்  அரசியல் கட்சி ஒன்றின் தொழிற்சங்கத்தின் பின்னணியில் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றது. ஆகவே குறித்த விடயம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகள் விரைந்து செயற்பட்டு தகுதியான தமிழ் பிராந்திய பொறியியலாளரை நிரந்தரமாக நியமிக்க முன்வரவேண்டும்  என எதிர்பார்க்கப்படுகிறது

Recommended For You

About the Author: Editor Elukainews