வடமாகாண மக்களுக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! |

வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும்,  எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர்  வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும்... Read more »

நாளை பதில் நாள் பாடசாலை…..!

நாளை சனிக்கிழமை அனைத்து தரங்களுக்குமான பதில் நாள்  பாடசாலை நடைபெறும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.   சீரற்ற காலநிலை காரணமாக நடைபெறாத பாடசாலைகளுக்கான பதில் பாடசாலைகள் நாளை சனிக்கிழமை நடைபெறும் எனவும், பதில் பாடசாலைகள் அனைத்து தரங்களை கொண்ட... Read more »

பருத்தித்துறை நீதிமன்ற வாயில் பொலிஸாரால் ஆயத முனையில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்….!

பருத்தித்துறை நீதிமன்றுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிராந்திய செய்தியாளர் ஒருவர் நீதிமன்றக் வாயில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து அவர் மீது துப்பாக்கியைக் காண்பித்து பொலிஸ் உத்தியோகத்தர் அச்சுறுத்தினார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச்... Read more »

பதவி கவிழ்க்கப்பட்டார் செல்வேந்திரா………!

வல்வெட்டித்துறை நகரசபையின்2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் ஒரு வாக்கால் தோல்வி அடைந்துள்ளது. கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் ஒரு வாக்கினால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது. நகரசபை சட்ட திட்டங்களுக்கமைய இரண்டாவது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை (30) வரவு... Read more »

வடமாகாணம் உள்ளிட்ட 6 மாகாணங்களில் பலத்த மழைவீழ்ச்சி..!

வடமாகாணம் உள்ளிட்ட 6 மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் அளவிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும். என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைக்கு தென்கிழக்காகவும் அண்மையாகவுமுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவில் கீழ்... Read more »

தமிழ்தேசிய அரசியலோடு விளையாடுபவர்கள் அதைக்கேற்ற விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.  

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர்  சுமந்திரன் அவர்கள் கனடாவில் உரையாற்றியபோது அங்கே இருந்த  தமிழ் தேசிய உணர்வாளர்கள் அவரை பேச விடாமல் தடுத்து திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். சாணக்கியனும் சுமந்திரனும் அந்த கூட்டத்தில் உரை ஆற்ற இருந்த போதும் சாணக்கியன் பேசி முடிக்கும்வரை... Read more »

தொலைபேசி அழைப்புக்களுக்கு வடக்கு ஆளுநர் பதிலளிப்பதில்லை! – பிரதமரிடம் முறையீடு.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் எம்.பிக்களான எம்மால் கூட தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி. சி.சிறிதரன் முறையிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே... Read more »

வல்வெட்டித்துறை பாதீடு தோற்கடிப்பு – இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளரானவர் பதவியிழக்கும் நிலை!

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளராக தெரிவானவர் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் , தவிசாளர் பதவியை இழக்கும் நிலைமையில் உள்ளார்.   வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை சபையில் புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் பாதீடு ஒரு வாக்கினால்... Read more »

பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள்   பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து குறித்த அளவீட்டு பணிகள் நிறுத்தம்.

கிளிநொச்சி நகரத்தில் பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள்   பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து குறித்த அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கே. என் 23 கிராம அலுவலர் பிரிவில் உள்ள  தனியாருக்கு சொந்தமான... Read more »

வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை! பலமான காற்றும் வீசும், வளிமண்டலவியல் திணைக்களம்.. |

வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும். என வளிமண்டலவியல் திணைக்களம் தொிவித்துள்ளது.  இதன்படி அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய... Read more »