பதவி கவிழ்க்கப்பட்டார் செல்வேந்திரா………!

வல்வெட்டித்துறை நகரசபையின்2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் ஒரு வாக்கால் தோல்வி அடைந்துள்ளது.

கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் ஒரு வாக்கினால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

நகரசபை சட்ட திட்டங்களுக்கமைய
இரண்டாவது தடவையாக இன்று
செவ்வாய்க்கிழமை (30) வரவு செலவுத் திட்டத்தை சபைத் தலைவர் செல்வேந்திரா சமர்ப்பித்து போது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. வாக்களிப்பின் போது முன்னரைப் போல எதிராக ஒன்பது வாக்குகளும் ஆதரவாக எட்டு வாக்குகளும் கிடைத்தன.

இதனால் ஒரு வாக்கினால் வரவு செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து சபைக்கு புதிய தலைவர், உப.தலைவர் தெரிவு செய்யப்பட்டவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சுயேச்சைக் குழுப்பக்கம் சேர்ந்து

கொண்டதால் சுயேச்சைக் குழு ஆட்

சியை அமைத்திருந்தது.

சுயேச்சைக் குழு கொண்டுவந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதன் பக்கம் இருந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்ததல் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது. அதே போலவே நேற்றைய(30)

கூட்டத்திலும் இடம்பெற்று ஒரு வாக்கால் சுயேச்சைக் குழு தோல்வி அடைந்தது.

வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களுமாக 9 பேர்
ஒரு அணியாகவும், சுயேச்சைக் குழு 4 உறுப்பினர்களும்
ஈ .பி. டி .பி. 2 உறுப்பினர்களும் ஈ .பி. ஆர். எல். எப் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலா ஒரு உறுப்பினர்
களுமாக 8 பேர் ஒரு அணியாகவும்
வாக்கெடுப்பில் கலந்துகொண்டமை குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews