கிளிநொச்சி மாவட்டத்தில் மேட்டுநில பயிர்ச்செய்கையாளர்கள் பாதிப்பு.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேட்டுநில பயிர்ச்செய்கையாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
 கண்டாவளை பிரதேச செயலர்  பிரிவிற்குட்பட்ட  பல பகுதிகளில்  தற்பொழுது எற்ப்பட்டுள்ள காலநிலை மாற்றம்  காரணமாக பல மேட்டு நிலபயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக விவசாயிகளின்  வாழ்வாதாரமான மேட்டு நில  பயிர்கள் முற்றாக வெள்ளநீரில் அழிவடைந்துள்ளது. மேட்டு நிலப்பயிர்களால  கத்தரி, வெண்டி, மரவள்ளி, வெற்றிலை, பயிற்றை என  பல பயிர்கள் மழை வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளது.
தற்பொழுது மரக்கரிவகைகளில் விலை மிக அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளிற்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு மேலும் விலையேற்றத்திற்கான சூழல் ஏற்படும் நிலையும் உள்ளது.
இந்த நிலையில், சம்மந்தப்பட்ட அரச திணைக்களங்கள் பாதிக்கபட்ட தமக்கு நட்ட ஈட்டினை பெற்றுத்தரவேண்டும்  என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews