இரு சகோதரர்களை காணவில்லை: தகவல் தெரிந்தால் உடன் அறிக்கவும்…..!

கம்பஹா கோட்டதெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 23ஆம் திகதி காணாமல் போன சிறுவர்கள் இருவரையும் கண்டறிவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கம்பஹா கோட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பிரதேசத்தை சேர்ந்த 10, 12 வயதுடைய சிறுவர்கள் இருவரை கடந்த 23 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என்று, கோட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உறவினர் முறையிலான இரு சகோதரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

திஸாநாயக்க முதியன்சலாகே கவிஸ சந்தகெலும் என்ற 10 வயது, 4 அடி உயரமான சிறுவனும் ஜயசேகர முதலிகே அகில தேதுனு என்ற 12 வயது, 04 அடி 10 அங்குலம் உயரமுடைய சிறுவனுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன சிறுவர்களின் புகைப்படங்களை இன்று (13) வெளியிட்டுள்ள பொலிஸார் தலைமையகம், அவர்கள் தொடர்பில் தகவல் தெரிவிந்தல் அது தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்களையும் வெளியிட்டுள்ளது.

இதற்கமைவாக குறித்த சிறுவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் 071-8591634, 033-2240050, 033-2272222 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தகவல் தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்;.

Recommended For You

About the Author: admin