சங்கானை பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம்!

சங்கானை பிரதேச செயலகல்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றது

ஒவ்வொரு வருட இறுதியிலும், சங்கானை பிரதேச செயலகமும், சங்கானை பிரதேச செயலக நலன்புரிச் சங்கமும் இணைந்து இரத்ததான முகாம் நடாத்தி வருகின்றது.

அந்தவகையில் இன்றையதினம், சங்கானை பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் குருதி வழங்கி இவ் இரத்ததான முகாமிற்கு பங்களிப்பு செய்தனர்.

Recommended For You

About the Author: admin