சங்கானையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

சங்கானையில் வாள்வெட்டுக்குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது.நேற்றிரவு பத்து மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு அட்டகாசம் செய்துள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குறித்த குழு அங்கு சென்று வீட்டின் கதவுகள், முச்சக்கர வண்டி, மீன் தொட்டி, தண்ணீர் குழாய், கதிரைகள் மற்றும் வேலி தகரங்கள் என்பவற்றினை வாளினால் வெட்டி சேதப்படுத்தியுள்ளது.

அக் கும்பல் முச்சக்கர வண்டிக்கு தீ மூட்டியுள்ளது. முச்சக்கர வண்டியினை மூடியிருந்த பொலுத்தீன் எரிந்துகொண்டிருந்தவேளை வீட்டிலிருந்தவர்கள் அந்த பொலுத்தீனை கீழே இழுத்து விழுத்தினர். இதனால் முச்சக்கர வண்டி பாரிய பாதிப்பிற்கு உள்ளாகவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: kathiresu bavananthy