தேசிய ரீதியில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முதலிடம்…..!

நவீன மயப்படுத்தப்பட்ட மாவட்டத்தின் நிர்வாகத்தின் ஊடாக அரச கொள்கைகளுக்கு அமைவாக சிறந்த ஒருங்கிணைப்பின் மூலம் மாவட்டத்தின் சமூக பண்பாட்டு விழுமியங்களை உயர்த்துதல் என்னும் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் தொலைநோக்கினை அடைந்து கொள்ளும் வகையில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட 2018/2019 ஆம் ஆண்டுக்கான உற்பத்தித்திறன் போட்டியில் கிளிநொச்சி மாவட்டச்செயலகம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் முதலாவது இடத்தினைப்பெற்று வெற்றியினை சுவீகரித்துக்கொண்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனி தலைமைத்துவத்தின் கீழ் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட பதவியணியினர் ஆற்றல் மிக்க வினைத்திறனான பொதுமக்கள் சேவையினை சிறப்பாக வழங்கியதன் மூலம் தேசிய ரீதியில் உற்பத்தித்திறன்,முன்னோடித்துவம், நவீனமயம், தொழில்நுட்பம், மற்றும் செளபாக்கியம் கொண்ட மாவட்டமாக அடையாளப்படுத்தி வெற்றி கண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews