பொது இடங்களில் வெற்றிலை எச்சிலை துப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.

பொது இடங்கள் மற்றும் வீதிகளில் வெற்றிலை எச்சிலை துப்பும் நபர்களுக்கு எதிராக இன்றிலிருந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி காரியாலயத்தின் விசேட பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரொஷான் ராஜபக்ஷ, பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவுக்கு இதுதொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வீதிகளின் ஒவ்வொரு இடங்களில் வெற்றிலை எச்சிலை துப்புபவதால் சூழல் பாதிக்கப்படுவதுடன் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்படும் ஆபத்தும் உள்ளதன் காரணமாக, இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அவசியம் தொடர்பிலும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

தண்டனை சட்டக் கோவைக்கமைய இந்த குற்றச்சாட்டுக்களில் ஈடுபடும் நபர்களை கைதுசெய்து, அவர்கள் மீது வழக்கு தொடர முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews