மருதங்கேணி போலீஸ் பிரிவில் ஒன்பதுபேருக்கு   தடை உத்தரவு….!

(மருதங்கேணி நிருபர்)

மாவீரர் வாரத்தில் இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டு இறந்தவர்களை கூட்டாக  நினைவு கூருவதற்க்கு 1975 ம் ஆண்டின் 15 ம் இலக்க  குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் 106/1(3) ம் பிரிவின் ஒன்பது பேருக்கு தடை உத்தரவு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் 21/11/2021 இன்றிலிருந்து 27/11/2021 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது

பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும், தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா,எம் கே. சிவாஜிலிங்கம் மற்றும்  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் இ.முரளீதரன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான வே.பிரசாந்தன்,விஜயழகன் றஜிதா ஆகியோருக்கும் அவர்களு சேர்த்து  இத் தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட பட்டவர்களோ அல்லது அவர்கள் மக்களை ஒன்று கூட்டி இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் உறுப்புரிமை பெற்று இறந்தவர்களை ஒன்றாக நினைவு கூருவதற்க்கே இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews