ஊவா மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு வழங்கல்

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஊவா மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் சைமன் பீரிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

தனியார் பஸ்களுக்கு தேவையான சில்லுகள், மின்களம், எரிபொருள் என்பவற்றை பெற்றுக்கொள்வதற்காக இந்த நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்பட்டது.

இதன்போது சுமார் 1,500 பேருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் தேனுக விதனகமகே, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews