ஆப்கானிஸ்தானில் மசூதி மீது தற்கொலை குண்டு தாக்குதல்!ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு.

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு குண்டூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமைக் கோரியுள்ளது.

நேற்றைய தாக்குதலில் 46 பேர் மரணமாகினர். மரண எண்ணிக்கை 80 வரை இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. 143 பேர் சம்பவத்தில் காயமடைந்ததுள்ளனர்.

சிறுபான்மை ஷியா முஸ்லீம் சமூகத்தால் பயன்படுத்தப்படும் இந்த மசூதிக்குள் சிதறிய நிலையில் உடல்களை காணொளிக் காட்சிகள் காட்டின. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுனி முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். ஆப்கானிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல், ஒரு வாரத்துக்குள் அந்த நாட்டில் மதத்தலங்கள் மீது நடத்தப்பட்ட, மூன்றாவது தாக்குதலாகும். இந்த தாக்குதல்கள், நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களை கோடிட்டுக் காட்டுகின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews